உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிர்வாகிகளை நீக்கும் ராமதாஸ்... சேர்க்கும் அன்புமணி; பா.ம.க.வில் வெடித்து கிளம்பிய பூசல்

நிர்வாகிகளை நீக்கும் ராமதாஸ்... சேர்க்கும் அன்புமணி; பா.ம.க.வில் வெடித்து கிளம்பிய பூசல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; பா.ம.க.,வில் நிலவும் உட்கட்சி பூசலின் உச்சக்கட்டமாக நிர்வாகிகளை ராமதாசும், அன்புமணியும் நீக்கியும், சேர்த்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். பா.ம.க.,வில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வந்த உட்கட்சி பூசல் நேற்று பகிரங்கமாக வெடித்தது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., இளைஞரணி தலைவர் முகுந்தன் நியமனம், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு, பொதுக்குழுவை கூட்டி அவரை நீக்குவேன் என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அன்புமணிக்கு எதிராக முன் வைத்தார்.ராமதாஸின் இந்தப் பேச்சு அக்கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந் நிலையில், உட்கட்சி மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களை அன்புமணி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் மொத்தமுள்ள 23 மாவட்ட தலைவர்களில் 22 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.சென்னை சோழிங்கநல்லூரில் மாவட்டம்தோறும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி அவர் பேசியதாவது; பா.ம.க., என்றால் நீங்கள் தான் (நிர்வாகிகள்) . நீங்கள் இல்லாவிட்டால் இந்த கட்சி கிடையாது. பொதுக்குழுவில் நீங்கள் தான் என்னை தேர்வு செய்தீர்கள். உங்களோடு சேர்ந்து அடிமட்ட தொண்டனாக நான் செயல்படுவேன். பொறுப்புகள் வரும், போகும். ஆனால், நிரந்தரம் உங்களின் அன்பு, பாசம் தான். அந்த வகையில், 3 நாட்கள் மாவட்ட, மாநில நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறோம். நிறுவனர் ராமதாசின் கொள்கைகள், வழிகாட்டுதல், சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்டவற்றை மனதில் நிறுத்தி, அதனை நடைமுறைப்படுத்த களத்தில் வேகமாக இறங்குவோம். அதில், உங்களில் ஒருவனாக முதல் தொண்டனாக நான் இறங்குவேன். நம் கட்சியைப் போல தமிழகத்தில் வேற எந்தக் கட்சியும் கிடையாது. தமிழகத்தின் வளர்ச்சி தான் நமது இலக்கு. அதனை அடைய நமக்குள் எந்த வேற்றுமையும் இருக்கக் கூடாது. ஊடகத்தினர் எதுவும் எதிர்பார்த்து வரவேண்டாம். ஏமாந்து போவீர்கள். விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன், எனக் கூறினார். இதனிடையே, பா.ம.க., மாநில பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கம் செய்து நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டார். அவருக்கு பதிலாக, சையது மன்சூர் உசேன் என்பவர் நியமிக்கப்பட்டார். அதேபோல, மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமாரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியும் ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, திலகபாமா பொருளாளராக தொடர்வார் என்று அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சி தலைமைகளான ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல், மேலும், மேலும் அதிகரித்து வருவது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

senthil, Ethiopia
மே 30, 2025 18:37

ஜாதி பெயரை சொல்லி ஒரு குடும்பம் நல்லா தமிழ்நாட்டு வன்னியர்களை முட்டாளாக்கி காசு பாத்தாச்சு . இப்போ யாரு யாரை முட்டாலாக்க போறாங்கன்னு ஜனங்க முடிவு செய்வாங்க இல்லையெனில் மறுபடியும் ஜனங்க முட்டாளா மாறுவங்க வன்னியர் ஜாதி பெயரை சொல்லிக்கிட்டு . கடவுள் தான் காப்பாத்தணும் தமிழ்நாட்டை


Santhakumar Srinivasalu
மே 30, 2025 18:36

இந்த குடும்பத்தை நம்பி வன்னியர் ஏமாந்தது தான் மிச்சம்


Santhakumar Srinivasalu
மே 31, 2025 14:30

நிறைய மக்கள் ரொம்ப காலத்திற்கு முன்பே வேறு கட்சிக்கு சென்று விட்டனர்.


Kulandai kannan
மே 30, 2025 18:29

குடும்பக் கட்சிகள் ஜனநாயகத்திற்கு கேடு. கட்சியை மகனுக்கு பட்டா போட்டபிறகு ராமதாஸ் ரிடையர் ஆகவேண்டியதுதானே!!


Santhakumar Srinivasalu
மே 30, 2025 18:37

சரியான பதிவு


Tiruchanur
மே 30, 2025 17:14

கட்சியை கைப்பற்றுங்க அன்புமணி.


P. SRINIVASAN
மே 30, 2025 16:34

முதல்ல ADMK, இப்போ பாமக, தெலுங்கானாவில் BRS.. பிஜேபிக்கு இது ஒன்னும் புதுசால்ல


Rathna
மே 30, 2025 16:33

பணம் பதவி ஆணவம் என்பது ஒரு இடத்தில தங்காது. அது இறைவனுடைய லீலை. சேர்த்த சொத்துக்களும், வாங்கிய பதவிகளும் தானாகவே ஓடி போகும். எத்தனை ஆயிரம் கோடி சேர்த்தாலும், சில தலைமுறை கடந்து பாவத்திற்கு ஏற்ப குடும்பங்கள் சாதாரண ஏன், பிச்சை எடுக்கும் நிலைக்கு கூட உள்ளடி சண்டைகளால் தெருவுக்கு வருவதுண்டு.


panneer selvam
மே 30, 2025 16:25

It is only family drama with lot of sentimental dialogues . Nothing is going to change since their base is their e .


Madras Madra
மே 30, 2025 16:09

பா மா கா வுக்கு என்று இருக்கும் ஒட்டு இப்போது குறைந்து விட்டது பலர் பா ஜா க ஆதரவு நிலை எடுத்து விட்டனர் முக்கியமாக இளைஞர்கள் ஏற்கனவே வேல்முருகன் வெளியேறி பலம் குறைந்த பா ம க இருக்கும் கொஞ்ச ஆதரவையும் இப்போ இழக்கும் நிலை கஷ்ட்டந்தான்


Narayanan
மே 30, 2025 15:53

ராமதாஸ் மூப்பின் காரணம் காட்டி கட்சியை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு அமைதியாக மீதம் உள்ள காலத்தை நிம்மதியாக கழிக்கலாம் . அதை விடுத்து கட்சி தொண்டர்களை குழப்பவேண்டாம்


திருட்டு திராவிடன்
மே 30, 2025 15:32

வன்னியர்களுக்கு துரோகம் செய்த கட்சி. வன்னியர்களின் உழைப்பில் உருவாகி இன்று குடும்ப சண்டையில் போய் முடிந்துள்ளது. எல்லாம் நன்மைக்கே.


புதிய வீடியோ