மேலும் செய்திகள்
ராமதாசும், அன்புமணியும் 'மியூசிக்கல் சேர்!'
15-Jul-2025
சென்னை: பூம்புகார் மகளிர் மாநாட்டில், கடும் மழையிலும் பல்லாயிரம் பேர் திரண்டதால் உற்சாகம் அடைந்துள்ள அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், வரும் 17ம் தேதி நடக்கும் பொதுக் குழுவில், அதிரடி முடிவுகளை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகன் அன்புமணி இல்லாமல், மாநில நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டங்களை முன்பு கூட்டிய அவர், நேற்று முன்தினம் பூம்புகாரில் மகளிர் மாநாட்டை நடத்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1gpd847w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் ராமதாஸ் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் ஸ்ரீ காந்திமதி, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் முதல் முறையாக ஸ்ரீ காந்திமதி பேசினார். தன்னை புகழ்ந்து மகள் பேசியதை, பூரிப்புடன் ராமதாஸ் கவனித்து கேட்டார். பின் பேசிய அவர், 'மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய கருணாநிதியை பாராட்டினார். தந்தையை மிஞ்சிய தனயனாக முதல்வர் ஸ்டாலின் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' எனவும் கோரிக்கை விடுத்தார். தன் பேச்சில் மகன் அன்புமணி உடனான மோதலை வெளிப்படுத்திய ராமதாஸ், தந்தை ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை விட, சிறியதாக கங்கைகொண்ட சோழ புரத்தில் ராஜேந்திர சோழன் கோவில் கட்டினார்' என்றார். பூ ம்புகார் மகளிர் மாநாட்டால் உற்சாகம் அடைந்துள்ள ராமதாஸ், வரும் 17ல் திண்டிவனம் அருகில் இருக்கும் பட்டானுாரில் நடக்கும் பொதுக்குழுவில், முக்கிய முடிவுகளை எடுக்க இருப் பதாக கூறப்படுகிறது. இது பற்றி ராமதாஸ் ஆதரவாளர்களிடம் பேசியபோது, 'தன்னை மிஞ்சிய தனயனாக அன்புமணி செயல்படக் கூடாது என்பதை, பூம்புகார் மாநாட்டு பேச்சின் வாயிலாக மீண்டு மொரு முறை ராமதாஸ் தெளிவு படுத்தியிருக்கிறார். 'வரும் 17ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில், பல அதிரடி முடிவுகளை எடுக்க இருக்கிறார். மகள் ஸ்ரீ காந்திமதிக்கு கட்சியில் அல்லது வன்னியர் சங்கத்தில் பொறுப்பு வழங்குவதோடு, அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறிக்கவும் திட்டமிட்டு உள்ளார்' என்றனர்.மகிழ்ச்சியில் திளைத்தேன்
பூம்புகாரில் நடந்த மகளிர் மாநாட்டின் மகத்தான வெற்றியை நினைத்து, விடிய விடிய உறக்கமின்றி மகிழ்ச்சியில் மிதந்தேன். பல நாட்களாகவே, பல்வேறு காரணிகளால், நான் உறக்கம் தொலைத்திருந்தேன். நேற்று அப்படி இல்லை. விடிய விடிய மகிழ்ச்சிக் கடலில் நீந்தி திளைத்திருந்தேன். இதைவிட பெரிய மகிழ்ச்சி இருக்குமா தெரியவில்லை. நான் பேசும்போது, பெண்கள் அளித்த கைத்தட்டல் வரவேற்பு, ஆள்வோரின் செவிப்பறையில் மோதியிருக்கும். கொட்டும் மழையில், கைக்குழந்தைகளோடு அசையாமல் பெண்கள் நின்ற ஒன்றே, வென்று விட்டோம் என்பதை பறை சாற்றுகிறது. ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,
15-Jul-2025