| ADDED : நவ 25, 2025 05:41 AM
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களில், உரிய நேரத்தில் குறைந்தபட்ச ஊதியம், பெண்களுக்கு சம ஊதியம், 40 கோடி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு என தொழில், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, இந்த சட்டங்கள் தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானவை. சுரங்கம், கனரக தொழில்களில் பெண்களுக்கு இரவு பணி என்பது மறுஆய்வு செய்யப்பட வேண்டும். புதிய சட்டங்களால் பணிநீக்கம் அதிகரிக்கும் என்று, தொழிற்சங்கங்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளன. வேலை நேரம், 9 முதல் 12 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டிருப்பது, தொழிலாளர் உரிமைக்கு எதிரானது. இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.