உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிர்வாகிகளிடம் சத்தியம் வாங்கிய ராமதாஸ்; சமூக ஊடக பேரவை கூட்டத்தில் பரபரப்பு

நிர்வாகிகளிடம் சத்தியம் வாங்கிய ராமதாஸ்; சமூக ஊடக பேரவை கூட்டத்தில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டிவனம் : தைலாபுரத்தில் நடந்த சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில், உட்கட்சி விவகாரங்கள் பற்றி யாரும் பேசக்கூடாது என நிர்வாகிகளிடம், கட்சி நிறுவனர் ராமதாஸ் சத்தியம் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம், மகளிர் அணி, இளைஞர் அணி, சமூக நீதி பேரவை, சமூக முன்னேற்ற சங்கம், கடைசியாக பட்டாளி தொழிற்சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டங்களில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.இந்நிலையில், நேற்று காலை சமூக ஊடகப் பேரவை கூட்டம் நடந்தது. கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொண்ட கட்சி கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பங்கேற்கவில்லை.சமூக ஊடகப் பேரவை மாநில தலைவர் தமிழ்வாணன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலர் ஜெயராஜ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 'சமூக வலைதளங்களில் உட்கட்சி விவகாரங்கள் பற்றி எதுவும் பேசக்கூடாது; தவறான கருத்துகளை பகிரக்கூடாது' என, நிர்வாகிகளிடம் ராமதாஸ் சத்தியம் வாங்கிக்கொண்டார். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அன்புமணியை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும். திண்ணை பிரசாரங்கள், பா.ம.க.,வின் வளர்ச்சித் திட்டங்கள், 108 ஆம்புலன்ஸ் திட்டம், பா.ம.க., மக்களுக்காக நடத்திய போராட்டங்கள், இட ஒதுக்கீடு குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து ராமதாஸ் விரிவாக கூறினார்.அன்புமணிக்கும் தனக்கும் மனக்கசப்பு இல்லை என ராமதாஸ் கூறினாலும், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் அன்புமணி கலந்து கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது, பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
மே 29, 2025 07:39

நான் எனது குடும்பத்தினர் அரசியலில் சேர்ந்தால் எங்களை முச்சந்தியில் நிற்க வைத்து சாட்டையால் அடியுங்கள் என்று சத்தியம் செய்தது யார் டாக்டர்?. மற்றவர்களுக்கு வேறு நியாயமா?


sekar
மே 29, 2025 08:12

அது மட்டுமா. யு டியூபில் போய் பாருங்கள். எத்தனை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை