டிச. , 12ல் ஆர்ப்பாட்டம் ராமதாஸ் பங்கேற்பு
சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பா.ம.க., சார்பில், டிச.,12ல் நடக்க உள்ள ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு பெறவும், இடைக்கால தீர்வாக வஞ்சிக்கப்பட்ட வன்னியர்களுக்கு, 10.5 இடஒதுக்கீடு பெறவும், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், அறவழி ஆர்ப்பாட்டம், பா.ம.க., சார்பில் நடத்தப்பட உள்ளது. சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளேன். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.