உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் கோவில் கட்ட நிதி தமிழகத்துக்கு 3ம் இடம்

ராமர் கோவில் கட்ட நிதி தமிழகத்துக்கு 3ம் இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''அயோத்தி ராமர் கோவில் கட்ட நிதி வழங்கியதில், இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் துாய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில் நேற்று கூட்டி தூய்மைப்படுத்தினார்.அப்போது அவர் கூறியதாவது:பிரதமர் வேண்டுகோள் படி வரும் 22ம் தேதி வரை நான்கு நாட்கள் பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என, 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.இந்தியாவில் உள்ள துாய்மை நகரங்கள் வரிசையில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. பல்லாவரம் எம்.எல்.ஏ., மகன் வீட்டு பணிப்பெண் புகாருக்கு நடவடிக்கை எடுப்பதில் போலீஸ் தரப்பில் தயக்கம் இருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பா.ஜ. களத்தில் இறங்கி போராடும்.தமிழக கவர்னர் எந்தவிதத்தில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார் என்று முதல்வர் சொல்ல வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கவர்னர் மீது குற்றஞ்சாட்டுவது, அவரது பணியாக உள்ளது. எந்த குற்றமும் செய்யாத சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகந நாதன் வீட்டில் ரெய்டு நடத்தி, அவரை கைது செய்து, ஆறு மணிநேரம் சுற்றவிட்டனர்.எங்கள் பேச்சை கேட்காவிட்டால் அனைத்து துணைவேந்தர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும் என எச்சரிக்கை விடுவது போல இந்த சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க.,வின், 32 மாத ஆட்சியை மக்கள் பார்க்கின்றனர். அந்த ஆட்சிக்கான எதிர்ப்பு, மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தால் பா.ஜ., பெரும் எழுச்சியை சந்திக்கும்.அயோத்தியில் ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டைக்கு முன் தமிழக கோவில்களுக்கு பிரதமர் வந்து செல்வதே நமக்கு பெருமை. உதயநிதி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சிறப்பான முறையில் அவர் நடித்திருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பு என்றால், பா.ஜ. தலைவர்கள் மேற்கொள்ளும் சந்திப்பை அவர் பார்க்க வேண்டும்.மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்டியதை எதிர்க்கிறோம் என உதயநிதி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்டு, மக்கள் நிதியால் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒருவர் மட்டும், 25 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார். அக்கோவில் கட்டுவதற்கு அதிக நிதி கொடுத்த மாநிலங்கள் வரிசையில், தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இதையும் தெரிந்து கொண்டு, அதன்பின் உதயநிதி ராமர் கோவில் நிர்மாணம் குறித்து பேச வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Seshan Thirumaliruncholai
ஜன 20, 2024 22:06

ஸ்ரீ ராமன் இந்திய மக்களின் பொக்கிஷம். அது மூடப்பட்டிருந்தால் அதனை தோண்டிதான் எடுக்கவேண்டும். ராமர் ஆலயத்திற்கு மேல் மசூதி உள்ளது. அது தொழுகை இல்லாத மசூதி.


பேசும் தமிழன்
ஜன 20, 2024 18:56

அவ்வளவு நல்லவர்கள் தமிழகத்தில் இருந்தால்.... திமுக மற்றும் இந்து விரோத கான் கிராஸ் கட்சி வெற்றி பெறுவது கடினமாயிற்றே???


DVRR
ஜன 20, 2024 15:44

எனக்கு ஒன்று புரியவில்லை நாய் குறைக்கும் பன்றி மலம் தின்னும் அதைப்போலத்தான் திருட்டு திராவிடமும் அவர்கள் DNA அது ஆகவே அவர்களை பற்றி குறைகூறுவதில் அர்த்தமில்லை. இதற்கு காரணம் ஒன்றே ஒன்று இந்து தமிழர்கள் மட்டுமே 30%-35% ஹிந்துக்கள் வோட்டு போடுவதில்லை? வோட்டு போடும் இந்துக்கள் தேவதாசிகள் பணம் வாங்கி அந்த கட்சிக்கு ஒட்டு போடுகின்றார்கள். கிறித்துவர்கள் சர்ச்சில் பாதிரியார் சொன்னவர்களுக்கு அதாவது திமுகவிற்கு முஸ்லிம்கள் மசூதியில் இமாம் சொன்னவர்களுக்கு அதாவது திமுகவிற்கு ஒட்டு போடுகின்றார்கள் சுய சிந்தனை இல்லை. இது நடக்கும் வரை திமுக கொடி/கோடி பறக்கும். இந்துக்கள் மனிதனாக கிறித்துவர்கள் மனிதனாக முஸ்லிம்கள் மனிதனாக சிந்திக்க ஆரம்பித்தால் திருட்டு திராவிட கட்சிகள் ஒருக்காலும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவே முடியாது


NALAM VIRUMBI
ஜன 20, 2024 11:41

இந்த உதவாக்கரைக்கு வரலாறு கற்பிக்க நல்ல ஒரு ஆசிரியர் தேவை.


Barakat Ali
ஜன 20, 2024 11:21

தமிழகத்தில் யாரிடமாவது அதிகம் பணம் இருக்கிறது என்றால் அது அரசியல்வாதியாகவே இருக்க முடியும் ........ அதுவும் ஆட்சியில் இருப்பவர்கள்தான் செலவு செய்ய முன்வருவார்கள் ... ஒருவேளை பாஜகவின் உறவை நாடி திமுக பிரமுகர்கள் அல்லது அவர்களின் பினாமிகள் பணம்அனுப்பியிருப்பார்கள் .......


Swaminadhan Krishnamoorthy
ஜன 20, 2024 10:36

One important fact must be clearly understood. The very mosque in Ayodhya came into being illegally and violently at the instance of the cruel Muslim invaders who destroyed the Ram Temple that existed there proved by irrefu evidence in the Ram Mandhir case. Only ignorant people mention only the mosque as if it always existed.


Arul Narayanan
ஜன 20, 2024 10:02

இஸ்லாமியர்களே உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அரசு கொடுத்த நிலத்தையும் பெற்று கொண்டு கோயில் கட்டவும் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இவர் எதிர்க்கிறாராம்.


raja
ஜன 20, 2024 06:15

திருட்டு இரயில் ஏறி வந்த ஒன்கொள் கொள்ளை கூட்ட திருட்டு திராவிட கோவால் புற குடும்பத்தை தமிழர்கள் அடித்து விரட்டுவார்க்கள்...


Ramesh Sargam
ஜன 20, 2024 05:51

உதய நிதி ஒரு உதவா நிதி. அவன் 'அதுக்கு' சரிப்பட்டு வரமாட்டானப்பா..


jeyabalan
ஜன 20, 2024 08:51

சொல்புத்தியும் சுய புத்தியும் இல்லாத ஒரு திருட்டு கூட்டம்.


ராஜா
ஜன 20, 2024 05:27

எப்பா நிதிய வாரிக்குடுத்த அந்த புண்ணியவாங்களா எங்கப்பா இருக்கீங்க? தயவு செய்து அடுத்து வரும் இரண்டு தேர்தலுக்கு மட்டும் ஓட்டு போட வந்துருங்கப்பா... உங்களுக்கு இன்னும் புண்ணியமா போகும்.


jeyabalan
ஜன 20, 2024 08:52

அருமையான தேவையான வேண்டுகோள் .


பேசும் தமிழன்
ஜன 20, 2024 18:57

அனைவருக்கும் நன்றாக உறைக்கும்படி இருக்கிறது.... உங்கள் கருத்து.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை