உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமாயணம், மகாபாரதம் தொடர்கள்

ராமாயணம், மகாபாரதம் தொடர்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன் துார்தர்ஷன் தொலைக்காட்சி மட்டுமே இருந்த காலத்தில் இந்தியில் ராமாயணம் மகாபாரதம் தொடர்கள் நீண்டகாலமாக ஒளிபரப்பானது. தமிழகத்திலும் இந்த தொடர் அமோக வரவேற்பை பெற்றாலும் வசனங்களை புரிந்து கொள்ள தமிழக மக்கள் சிரமப்பட்டனர். இந்த குறையைப் போக்கதினமலர் இதழ் முன் வந்தது. இதற்காக துார்தர்ஷன் மற்றும் தொடர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தொடர்களின் வசனங்களை முன்கூட்டியே பிரத்யேகமாக பெற்றது. இந்தி வசனங்களை அதே உச்சரிப்புடன் தமிழில் கொடுத்து, அதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதையும் அதோடு சேர்த்து வெளியிட்டது தினமலர். ஒவ்வொரு ஞாயிறும் வாசகர்கள் அதை படித்த பின்பே தொடரை முழுமையாக பார்த்து ரசித்தனர். வாசகர்களின் அமோக பாராட்டை பெற்றது இந்த பணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி