உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; நெல்லை மாணவன் முதலிடம்

மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; நெல்லை மாணவன் முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். நெல்லை மாணவன் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்தார்.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் துவங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர 7.5சதவீத இட ஒதுக்கீட்டில் 4,281 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 4,062 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 39,853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை மாணவன் முதலிடம்

* நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்தார்.* 655 மதிப்பெண் பெற்ற சேலத்தைச் சேர்ந்த மாணவர் அபினீத் நாகராஜ் 2ம் இடம் பிடித்தார்.*சேலத்தை சேர்ந்த ஹருதிக் விஜயராஜா தரவரிசைப் பட்டியலில் 3ம் இடம் பிடித்துள்ளார். * திருவள்ளூர் மாணவர் ராகேஷ் 4வது இடத்தையும், செங்கல்பட்டு மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

D.Ambujavalli
ஜூலை 25, 2025 16:20

Neet தேர்வை ரத்து செய்வோம் என்று முழங்கி 50 லட்சம் கையெழுத்தை வாங்கி பாடான பட்ட பின்னும் முதல் 5 இடம் தமிழ் நாட்டு மாணவகளுக்கா? என்ன அநியாயம்


Ganapathy
ஜூலை 25, 2025 12:19

இதுக்கும் திராவிட அப்பாவின் திருட்டுத்திராவிடிய அப்பாவோட சமத்துவ கல்விதான் காரணமா?


கண்ணன்,மேலூர்
ஜூலை 25, 2025 13:15

ஹலோ மைக் டெஸ்டிங் ஒன், டூ, த்ரீ, யாருப்பா அந்த சார் அவர் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்...


Barakat Ali
ஜூலை 25, 2025 11:53

Cute Madam sitting in back.


.
ஜூலை 25, 2025 13:16

அது க்யூட் இல்ல மேடம்!


Jack
ஜூலை 25, 2025 11:21

தமிழில் மருத்துவ படிப்பு அறிமுகப்படுத்த எந்தெந்த நடவடிக்கைகள் எடுத்தார் இந்த மாசு ?


புதிய வீடியோ