உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் எலி காய்ச்சல் அதிகரிப்பு; மழைநீரில் வெறும் காலில் நடக்காதீர்

தமிழகத்தில் எலி காய்ச்சல் அதிகரிப்பு; மழைநீரில் வெறும் காலில் நடக்காதீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, தேங்கியுள்ள மழை நீரில், வெறும் காலில் நடக்க வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சுழல் வடிவ நுண்ணுயிரியான, 'லெப்டோஸ்பைரா' எனப்படும் பாக்டீரியாவால், எலி காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா விலங்குகளுக்கு பரவி, அதன் வாயிலாக, மனிதர்களிடம் தொற்றிக் கொள்ளும் நோயாகும். இது, சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாய்கள், பன்றிகள், கால்நடைகளின் சிறுநீர் வாயிலாகவும், குறிப்பாக எலிகளின் கழிவு வாயிலாகவும், மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. பொதுவாக மழைப்பொழிவுக்கு பின், நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படும். எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு, 'லெப்டோ ஸ்பைரோ சிஸ்' தடுப்பு மற்றும் கட் டுப்பாட்டுக்கான திட்டத்தை, தமிழகம், குஜராத், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களிலும், அந்தமான் - நிகோபர் தீவுகளிலும் துவக்கியது. எலி காய்ச்சல் நோயை கண்டறிய, மத்திய அரசால் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் உட்பட, 10 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு எலி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: எலி காய்ச்சல் பாதிப்பை உறுதிப்படுத்த, 'ஆர்.டி.பி.சி.ஆர்.,' பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. தமிழகத்தில், 2021ல், 1,046 பேருக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை, 2022ல், 2,612 ஆகவும், 2023ல் 3,002 ஆகவும் அதிகரித்தது. கடந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமானோருக்கு எலி காய்ச்சல் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை, 1,500க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உள்ள மாவட்டங்களில், மருத்துவ கண்காணிப்பு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் இடத்தில், நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள், தேங்கியி ருக்கும் மழை நீரில் வெறும் கால்களில் நடக்கக் கூடாது. தொற்று உள்ள உயிரினங்களின் கழிவுகள், மழை நீரில் கலந்திருக்கக் கூடும். அதில், கால் வைத்தால், நமது உடலிலும் தொற்று ஊடுருவ வாய்ப்புள்ளது. எனவே, விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். வெளியே சென்று வந்த பின், கை, கால்களை நன்னீ ரில் நன்றாக சோப்பு போட்டு அலச வேண்டும். முடிந்தால் குளிப்பது சிறந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Modisha
அக் 25, 2025 12:02

பன்னி காய்ச்சல் கூட இருக்கு. ரோடுல போரவன அடிக்குது .


சிந்தனை
அக் 25, 2025 11:13

ஓ அப்படியா அப்படின்னா வீதி தண்ணீர் யார் காலில் எல்லாம் பட்டதோ அவர்களை எல்லாம் கொலை செய்துவிட்டால் நாடு ஆரோக்கியமாக இருக்கும்


Ram pollachi
அக் 25, 2025 10:31

எல்லா எலிகளையும் ராஜஸ்தானுக்கு அனுப்பி விடலாம்.... பேருந்தா? இரயில் வண்டியா அதை முடிவு செய்யவும் ‌


Keshavan.J
அக் 25, 2025 11:44

எது வேணும் ரயிலா அல்லது பேருந்தா?


duruvasar
அக் 25, 2025 12:20

நாங்க உக்கிரைனுக்கே பஸ் அனுப்பியவங்க. எங்க வந்து என்ன கேள்வி கேக்குறீங்க


Devanand Louis
அக் 25, 2025 09:49

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் தற்போது பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் sewer canal பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் ஒப்பந்ததாரர் தரமற்ற சிமெண்ட் கலவையை substandard cement mix ratio பயன்படுத்துகிறார் என்பதைக் காண முடிகிறது. இதனால் எதிர்காலத்தில் வாய்க்கால்கள் உடைபடுதல், நீர் தேக்கம், மண் சரிவு போன்ற அபாயங்கள் ஏற்படலாம். இத்தரக்குறைவான பணிகளுக்குக் காரணம், ஒப்பந்ததாரர் திமுக கவுன்சிலர்களுக்கும் சில பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கமிஷன் அழுக்கு பணம் வழங்குவதால் பணிகளின் தரம் கண்காணிக்கப்படாமல் போவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தப் பணிகளுக்குரிய மேற்பார்வை, சோதனை, மற்றும் தரச் சரிபார்ப்பு நடவடிக்கைகள் நகராட்சி பொறுப்பாளர்களால் முறையாக செய்யப்படவில்லை. மேலும் குறிப்பிடத்தக்கது, மழைக்காலத்தில் rainy season பணிகள் நடைபெறும் போது ஒப்பந்ததாரர் வாய்க்கால்களின் சுற்றுப்பகுதியில் மணல் நிரப்புதல் sand filling செய்யாமல் விட்டுள்ளார். இதன் காரணமாக பல இடங்களில் மண் தள்ளாடுதல், குழிகள் உருவாகுதல், மற்றும் நடைபாதைகள் sidewalks சரிவது போன்ற அபாயங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. வாய்க்கால் கட்டுமானப் பணிகள் முடிந்த பின், அதனைச் சுற்றியுள்ள நடைபாதைகள் சரியாக அமைக்கப்படவில்லை. இதுபோன்ற குறைபாடுகளால் மக்கள் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ நேர்ந்தால் அதற்கான முழுப் பொறுப்பும் திருமங்கலம் நகராட்சியின்மேல் இருக்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். அத்துடன், இந்தக் கழிவுநீர் வாய்க்கால்கள் திறந்தவாறு விடப்படக் கூடாது. அவை தகுந்த தகடுகள் slabs மூலம் மூடப்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் கொசுக்கள் பெருகும் அபாயம், துர்நாற்றம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் அதிகரிக்கும்.


raja
அக் 25, 2025 08:14

கரூரில் கூட அணில் காய்ச்சலால் 41 பேர் மரணம்....மக்கள் அணிலை கண்டு பயந்து அதை கண்டால் கொல்லவேண்டும்....


ManiK
அக் 25, 2025 07:51

ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை செய்து அறிக்கை தந்த பிறகு துபாய் போய் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு உலக வங்கில கடன் வாங்கி எலிய புடுச்சுடும் எங்கள் திறமையான திமுக அரசு.


Ramesh Sargam
அக் 25, 2025 09:39

... அப்புறம் இறந்த எலியை கையில் பிடித்துக்கொன்று எங்கள் தலைவர் போட்டோசூட் எடுத்துப்பார். அது பத்திரிகையில் பிரசுரிக்கப்படும்.


Ramesh Sargam
அக் 25, 2025 07:47

எலிகளை பிடிக்க பூனை வாங்குவார்கள். அதற்கு ஒரு சில கோடிகள் செலவாகும். அரசை யாரும் விமர்சிக்கக்கூடாது.


Ramesh Sargam
அக் 25, 2025 07:22

எலிகளை பிடிக்க ஒரு தனி குழுமம் அமைக்கப்படும் ஒரு சில கோடிகள் செலவில். கவலையை விடுங்கள்.


Field Marshal
அக் 25, 2025 07:05

இதுக்கு ஒரு பூனை விரோதி தாக்குதல்னு பெயர் வெச்சுடுவாங்களே ..நகரின் பல தெருக்களில் மழைநீர் கழிவு நீர் கலந்து தேங்கியிருப்பது கவலைக்குரிய விஷயம் ..


புதிய வீடியோ