உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடை ஆய்வு அதிகாரிகள் குளறுபடி

ரேஷன் கடை ஆய்வு அதிகாரிகள் குளறுபடி

சென்னை:ரேஷன் கடைகளில், உணவுப் பொருட்கள் சரியாக வழங்கப்படுகின்றனவா என்பதை, உணவு மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், கடைக்கு செல்லாமல், அங்குள்ள ஆய்வு பதிவேடுகளை அலுவலகத்திற்கு எடுத்து வரச் சொல்லி, ஆய்வு செய்தது போல் குறிப்புகளை எழுதினர். இதைக் கண்டுபிடித்த, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை உயரதிகாரிகள், ரேஷன் கடை ஆய்வுக்கு என, மொபைல் போன் செயலியை, 2022ல் அறிமுகம் செய்தனர். இந்த செயலியை, அனைத்து அதிகாரிகளும் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதாவது கடைக்கு சென்று, அங்குள்ள விற்பனை முனைய கருவி அருகில் இருந்தபடிதான், செயலியில் இருப்பு குறைவு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய முடியும். இதிலும் முறைகேடு செய்கின்றனர். கடைகளுக்கு நேரடி ஆய்வுக்கு செல்லாமல், வேறு நபர்களை அனுப்பி, கடை விற்பனை விபரங்களை, அங்கிருந்தபடியே செயலியில் பதிவு செய்து விடுவதாக புகார் எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி