உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்கும் திட்டம் தொடங்கியது

 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்கும் திட்டம் தொடங்கியது

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்கும் திட்டத்தை, அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் ஆகியோர், சென்னையில் நேற்று தொடங்கி வைத்தனர். வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், தற்போது தமிழகத்தில் வெளிச்சந்தையில் கிலோ வெங்காயம், 60 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இதையடுத்து, ரேஷன் கடைகளில் கிலோ வெங்காயம், 35 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கும் திட்டத்தை, உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் நேற்று தொடங்கி வைத்தனர். ஒரு கார்டுதாரருக்கு தலா ஒரு கிலோ வெங் காயம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் அமுதா, கூட்டுறவு பதிவாளர் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், அமைச்சர் வெங்கடரமணன் கூறியதாவது: தமிழகம் முழுதும் விலை உயர்வை தடுக்க, 61 பொருட்களின் விலைகள் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வெங்காய விலை உயர்வை தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உடனே, மத்திய அரசுடன் பேசி, 1,000 டன் வெங்காயம் வாங்கப்பட்டு, மாநிலம் முழுதும், 8,914 ரேஷன் கடைகள் வாயிலாக விற்கப்படுகிறது. இதனால், 80 லட்சம் கார்டுதாரர்கள் அதாவது, மொத்தம் உள்ள கார்டுதாரர்களில், 35 சதவீதம் பேர் பயன் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார். பிற மாநிலங்களிலும் த.வெ.க., அமைச்சர் வெங்கடரமணன் மேலும் கூறியதாவது: ஊழல் இல்லாத ஆட்சி, லஞ்சம் இல்லாத ஆட்சி, நேர்மையான ஆட்சி, மக்கள் விரும்பும் ஆட்சியாக, த.வெ.க., ஆட்சி உள்ளது. வரும் காலங்களில் தேவைப்படும் பட்சத்தில், மற்ற மாநிலங்களில் கட்சி விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை