உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் ஆக்கப்பூர்வ விமர்சனங்கள் வைத்தால் கருத்தில் கொள்ள தயார்; அமைச்சர் ஆதவ்

ஸ்டாலின் ஆக்கப்பூர்வ விமர்சனங்கள் வைத்தால் கருத்தில் கொள்ள தயார்; அமைச்சர் ஆதவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல. வேறு யாரிடம் இருந்தும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கு தயார்'' என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை குறித்த பிரச்னை தொடர்பாக முதல்வர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது உண்மைக்கு முரணானதாகும். காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் சட்டப்பூர்வ நீர் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் தமிழக அரசு தொடர் மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டங்களில் தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்தி வருகிறது. கடந்தகால குளறுபடிதமிழகத்துக்குரிய நீரை உரிய காலத்தில் திறந்துவிட வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. எனவே, தமிழகத்தின் சட்டப்பூர்வ நீர் உரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம், காவிரி நதி நீர் விவகாரத்தில், மேகதாது அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்ப நாங்கள் விரும்பவில்லை. மக்களின் வாழ்வுரிமைஅப்படிப்பட்ட குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல. வேறு யாரிடம் இருந்தும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கும், கவனப்படுத்துவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்னை அல்ல. தமிழக மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமைப் பிரச்னையாகும். அரசியல் ஆதாயம்எந்தவித குறுகிய அரசியல் நோக்கத்தோடும், அரசியல் ஆதாயத்தின் கணக்குகளோடும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு செயல்படவில்லை. மாறாக, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரையிலும், தமிழகத்தின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கும். காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும்; தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும். இவ்வாறு ஆதவ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Venkatesh
ஜூலை 26, 2026 22:25

பேயுக்கும் பேயுக்கும் சண்டை என்று ஒரு சினிமா வசனம்.,.... இங்கே மானங்கெட்ட மாடலுக்கும் திறனற்ற தற்குறி கூட்டத்திற்கும் போட்டி..., ஆனால் ஒரு நிம்மதி பெருமூச்சு பெரும்பாலுமான தமிழக மக்களுக்கு...,. மானங்கெட்ட மாடல் ஒழிந்தது


sankaranarayanan
ஜூலை 26, 2026 19:58

திராவிட மாடல் அரசின் முன்னாள் முதல்வருக்கு தெரிந்தது எல்லாமே அவருடைய அப்பா எழுதி கொடுத்தது அதாவதுதான் அவர் செய்ததைத்தான் சொல்லியிருக்கிறார் தர்ணா என்றால் சென்னை கடலோரம் சென்று மெரினா பீய்ச்சின் அருகில் ஒரு சிலையோரம் கட்டிலைபோட்டு தூங்க வேண்டுமாம் இரன்டு பக்கங்களில் இரு துணைவியர்களையும் வைத்துக்கொண்டு படுத்து உறங்க வேண்டுமாம் இதுதான் உண்ணாவிரதம் பிறகு கட்சியாளர்கள்கள் வெற்றி என்று சொன்னவுடன் வீடு திரும்ப வேண்டுமாம் இதுதான் நடந்தது மக்கள் அனைவர்க்கும் நன்றாகவே தெரியும் சென்ற முறை இதுபோன்று நடந்த முடிந்தவுடன் ஸ்ரீ லங்காவவில் பல லட்சம் ஜனங்கள் வீட்டை விட்டு அமைதி என்ற பொய் சொல்லை நம்பி வெளியே வந்து மாண்டுபோனார்கள் .


V Venkatachalam, Chennai-87
ஜூலை 26, 2026 15:40

ஆதவ் க்கு முகஸ் பத்தி நல்லாவே தெரியும். அதூனால தான் முகஸ் ஐ போட்டு வெளுத்து வாங்குறாரு. வீர வாள் வாங்கிக்கிறது எப்புடி வெள்ளி நாற்காலியில உக்கார்ந்துகிறது எப்புடி வாக்கிங் போறது எப்புடி வாக்கிங் போறப்ப ஓட்டு பிச்சை எடுக்குறது எப்புடி ன்னு கேட்டாக்க ஒரு வேளை சொல்ல வாய்ப்புண்டு. ஆக்கபூர்வம்? நஹீன்..


SUBBU,MADURAI
ஜூலை 26, 2026 14:43

ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வைப்பது என்பது அவர் கையில் இல்லை அவர் என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுகிறார்? பாவம் அவருக்கு எதுவும் தெரியாது. அதெல்லாம் அவருக்கு எழுதித்தரும் நபருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். எனவே எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?


Kasimani Baskaran
ஜூலை 26, 2026 14:37

தனது அடிபொடிகளை அனுப்பி வைத்ததால் தங்களது ஆட்சி நடப்பதாகவே கற்பனை செய்து கொண்டு இருக்கிறார்


ராமகிருஷ்ணன் பரமக்குடி
ஜூலை 26, 2026 14:29

திமுகவின் ஆட்சி லட்சணம் தெரிந்தும் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்க முடியுமா, TVKயை சங்கட படுத்தும், கெட்ட பெயரை ஏற்படுத்தும் ஆலோசனை தான் சொல்வார். திமுக சொல்வதெல்லாம் நீங்கள் செய்தால், அவர்கள் தான் ஆட்சி நடத்துகிறார்கள் என்று வெக்கமே இல்லாமல் சொல்லி பீத்திக் கொள்வார்கள். சிறிதும் மதிக்காமல் செயல்பட வேண்டும்


சாமானியன்
ஜூலை 26, 2026 14:28

ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை வழங்க நான் தயார். அ ) அணைகளை தூர் வார வேண்டும். ஆ) உள் ரோடுகளை சீரமைக்க வேண்டும். இ) பெங்களூர் செல்லும்போது அமைச்சர்களோடு தயாரிப்புடன் புள்ளி விபரங்களோடு செல்லவும். ஈ) அமைச்சர்கள் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே மீடியா பேட்டி தரனும். தொடரும்.


sundarsvpr
ஜூலை 26, 2026 13:26

ஜெயலலிதா செய்த தவறு கருணாநிதி செய்த தவறு என்று நினையாமால் நாம் செய்த தவறு என்ற நிலையில் பிரச்சனைகளைஅணுகுதல் தீர்த்தல் நல்லது. தமிழ்நாட்டு மக்கள் பிரச்சனை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசியல்தனம் தேவையற்றது. ஒருவன் சம்பாதித்தால் தனக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதியை பகிர்ந்துஅளிப்பான். இதுபோல் அணுகுவது பிரச்னை முடிவிற்கு வர சாத்தியம் உண்டு.


Tamilan
ஜூலை 26, 2026 13:12

விஜய் தன வாழ்நாளில் நடித்த அணைத்து படங்களிலும் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், காட்டுமிராண்டித்தனகள் இல்லாத படங்களே இல்லை. இதில் எது ஆக்கபூர்வம் என்கிறார் இவர்?. இப்போது நடித்துள்ள படத்தில் ஒரு பயங்கரவாதியைப்போல் நடித்துள்ளார். இவர்களுக்கு ஆட்சி செய்ய என்ன தகுதி இருக்கிறது ?. ஆக்கபூர்வமாக என்ன செய்துவிடுவார்கள்?


Jesus
ஜூலை 26, 2026 13:04

ஆதவ் அர்ஜுனிடம் முதல்வர் விஜய் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... இவர் ஒரு மிகவும் சந்தர்ப்பவாதி


உதயா
ஜூலை 26, 2026 14:54

ஆமாம் சரியாக சொன்னீர்கள்... அண்ணே எப்ப போவாரு திண்ண எப்ப காலி ஆகும்னு நினைக்கக் கூடிய ஆள் இந்த ஆதவ் அர்ஜுன்


உதயா
ஜூலை 26, 2026 15:07

உண்மைதான்... அண்ணே எப்ப போவாரு திண்ண எப்ப காலி ஆகும்னு நினைக்க கூடிய ஆள் தான் அவரு.. மிக எச்சரிக்கையுடன் விஜய் அவர்கள் இருக்க வேண்டும்


முக்கிய வீடியோ