சிறப்பு வசதிகள் பட்டியல் வெளியிட கட்டுமான நிறுவனங்களுக்கு தடை: ரியல் எஸ்டேட் ஆணையம் நடவடிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், அதில் இடம் பெறும் சிறப்பு வசதிகள் குறித்து நீளமான பட்டியல் வெளியிட, ரியல் எஸ்டேட் ஆணையம் தடை விதித்துள்ளது. கடும் போட்டி தமிழகத்தில் தேவை அதிகரித்துள்ளதால், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவதில், கட்டுமான நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதனால், சிறப்பான வடிவமைப்பு, விலையில் சலுகை, சிறப்பு பரிசுகள் என்ற ரீதியில் இருந்த தொழில் போட்டி, ஒரு கட்டத்தில் சிறப்பு வசதிகளை பட்டியலிடும் முறைக்கு மாறியது. ஆரம்பத்தில் இந்தப் பட்டியலில், 10 முதல் 30 வகை வசதிகள் இடம் பெற்றன. நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் போன்றவை அதில் பிரதான இடம் பிடித்தன. தற்போது கூடுதல் வசதிகள் பட்டியல், 150 முதல், 250 வரை நீண்டுள்ளது. இந்த வசதிகள் எல்லாம் தேவையா என்பதை கூட அறிய முடியாமல், மக்கள் தவிக்கும் நிலை உருவாகியுள்ள து. குறிப்பிட்ட சில நிறுவனங்கள், அதிக வசதிகள் குறித்த பட்டியலை வெளியிடும் போது, நடுத்தர மற்றும் சிறிய கட்டுமான நிறுவனங்களின் திட்டங்கள் ஓரங்கட்டப்படும் சூழலும் உருவாகிறது. இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணையத்துக்கு புகார்கள் குவிந்தன. எனவே , கட்டுமான நிறு வனங்கள் தங்கள் திட்டங்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்கு, ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. மறுபரிசீலனை அதன்படி, திட்டங்கள் குறித்த வெளியீடுகளில், சிறப்பு வசதிகள் குறித்த நீளமான பட்டியல் இடம் பெறக்கூடாது. இந்த தடையால், கட்டுமான நிறுவனங்கள், சிறப்பு வசதிகள் குறித்து போட்டி போட்டு பட்டியல் வெளியிடுவது முடிவுக்கு வந்துள்ளது. எனினும், இந்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையத்திடம் கட்டுமான நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.