உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தேவை

 ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தேவை

மதுரை: ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த தமிழகத்தில் ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்கும் வகையில் தமிழ்நாடு ரயில்வே மேம்பாட்டுக் கழகம் அமைக்க வேண்டும். திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக விருதுநகர் செல்லும் வகையில் புறவழி ரயில்பாதை அமைக்க வேண்டும். திருச்செந்துார் ஸ்டேஷனில் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில் 5 பிளாட்பாரங்கள் அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா, சென்னை சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் தமிழக தலைமைச் செயலர் முருகானந்தத்திடம் வலியுறுத்தினர். இதையடுத்து தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் மேற்கண்ட கோரிக்கைகள் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாண்டியராஜா கூறியதாவது: ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே திட்டங்கள், அடிப்படை கட்டமைப்புப் பணிகள் விரைவு பெறும். திருச்செந்துாரில் நீண்ட பிளாட்பாரங்கள் அமைந்தால் முருக பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பெட்டிகளுடன் ரயில்களை இயக்க முடியும். தென்காசி புறவழி ரயில் பாதை அமைந்தால்திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். இதனால் திருநெல்வேலி ஸ்டேஷனில் நெரிசல் குறைவதோடு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Seyed Omer
நவ 20, 2025 22:53

ஆன்மீக தலமான திருச்செந்தூருக்கு சென்னையி்ல் இருந்து ஒரே ஒரு ரெயில் சேவை மட்டுமே இயக்க படுகிறது எனவே சென்னை விழுப்புரம் திருச்சி மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி முக்காணி. ஆறுமுகனேரி காயல்பட்டிணம் வழியாக திருச்செந்தூருக்கு பகல் நேர ரயில் சேவை இயக்க வேண்டும் மேலும் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு இரட்டைவழி ரெயில் பாதை அமைக்க வேண்டும் காயல்பட்டினம் ரெயில் நிலைய பயணியர் தங்குமிடம் படுமோசமாக உள்ளது ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்


முக்கிய வீடியோ