உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எரிந்த நிலையில் இருவர் பிணம்

எரிந்த நிலையில் இருவர் பிணம்

வேலூர்: ஆற்காடு அருகே எரிந்த நிலையில் விவசாயி மற்றும் ஒரு பெண் பிணமாக கிடந்தனர்.ஆற்காடு அடுத்த அனத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனிசாமி (45) இவரது மனைவி விஜயா (35). இவர்களுக்கு திவ்யா, தீபா என்ற மகள்களும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர். முனிசாமி அவரது நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். கடந்த 10ம் தேதி முனுசாமியின் மனைவி விஜயா, தன் மகன், மகள்களை அழைத்து கொண்டு கண்ணமங்கலத்தில் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார். இந்தநிலையில் செப்.,12ம் தேதி மாலை முனிசாமி வீட்டில் இருந்து அதிகளவு புகை வந்தது.தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீஸார் விரைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு முனிசாமியும் அதே ஊரை சேர்ந்த பாபுவின் மனைவி சுமதியும் (35) நிர்வாணமாக கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது மண்ணெண்ணை ஊற்றி கொலை செய்யப்பட்டார்களா என்று தெரியாமல் போலீஸார் குழம்பினர். விசாரணையில், எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சுமதி, தன் மகன்களுடன் அதே ஊரில் வசித்து வந்தார். இவரது கணவர் பாபு சென்னையில் மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்கின்றார். முனிசாமிக்கும், சுமதிக்கும் கள்ள தொடர்பு இருந்தது. இதனால், இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்