வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில் தாங்கல, அதனால் இந்தப் பக்கமும் மழைக்கு வாய்ப்புள்ளதானு கேட்டு சொல்லுங்க.
சென்னை: நீலகிரிக்கு வரும் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 11) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று (ஜூன் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uuzu562t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* நீலகிரி* கோவை* திண்டுக்கல்* தேனி* திருவண்ணாமலை* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்,* செங்கல்பட்டு,நாளை (ஜூன் 12)மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* நீலகிரி,* கோவை மாவட்ட மலைப்பகுதிகள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* திண்டுக்கல்* தேனி* தென்காசி* திருநெல்வேலி* கன்னியாகுமரிரெட் அலெர்ட்
நீலகிரிக்கு வரும் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.ஜூன் 14ம் தேதிமிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* தேனி* தென்காசி* கன்னியாகுமரி* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருப்பூர்* திண்டுக்கல்ஜூன் 15ம் தேதிமிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* தென்காசி* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்* கன்னியாகுமரிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* திருப்பூர்* திண்டுக்கல்* தேனிஜூன் 16ம் தேதிமிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* திண்டுக்கல் * தேனி* தென்காசி* திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்* கன்னியாகுமரிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவுரை வழங்கி உள்ளது.
வானிலை மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் விரைந்துள்ளனர். மாநில பேரிடர் மீட்புப்படையை பொறுத்தவரை கோவைக்கு 2 குழுக்களும், நீலகிரிக்கு 3 குழுக்களும் விரைந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில் தாங்கல, அதனால் இந்தப் பக்கமும் மழைக்கு வாய்ப்புள்ளதானு கேட்டு சொல்லுங்க.