உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - புதுச்சேரி உட்பட 10 ரயில்களில் பெட்டிகள் குறைப்பு

சென்னை - புதுச்சேரி உட்பட 10 ரயில்களில் பெட்டிகள் குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சென்னை - புதுச்சேரி உட்பட 10 மெமு ரயில்களில், தலா 2 பெட்டிகள் குறைக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தெற்கு ரயில்வே அறிக்கை:உத்தர பிரதேச மாநிலத்தில், மகா கும்பமேளா நடைபெற உள்ளதால், கூடுதல் ரயில்கள், ரயில் பெட்டிகள் தேவைப்படுகின்றன.இதனால், குறுகிய துாரத்திற்கு இயக்கப்படும், 'மெமு' வகை ரயில்களில், பெட்டிகளை தற்காலிகமாக குறைத்து இயக்கப்பட உள்ளன. அதன்படி, 10 பயணியர் ரயில்களில் தற்போதுள்ள 12 பெட்டிகளில் இருந்து, தலா 2 பெட்டிகள் குறைக்கப்படும்.எழும்பூர் - புதுச்சேரி ரயிலில் நேற்று முதலும், புதுச்சேரி - திருப்பதி, திருப்பதி - புதுச்சேரி, புதுச்சேரி - எழும்பூர் ரயில்களில் நாளை முதலும், தாம்பரம் - விழுப்புரம், விழுப்புரம் - தாம்பரம், கடற்கரை - விழுப்புரம், திருவண்ணாமலை - தாம்பரம் உள்ளிட்ட ரயில்களில், 26ம் தேதி முதலும் பெட்டிகள் குறைத்து இயக்கப்படும்.அடுத்த அறிவிப்பு வரும் வரை, இது தொடரும். விழுப்புரம் - கடற்கரை பயணியர் ரயில், வரும் 26ம் தேதி முதல் தாம்பரம் அடுத்து கிண்டி, மாம்பலம், எழும்பூரில் மட்டுமே நிற்கும்; பூங்கா நகர், கோட்டை நிலையங்களில் நிற்காது திருவண்ணாமலை - தாம்பரம் பயணியர் ரயில், வரும் 27ம் தேதி முதல் விரைவு பாதையில் இயக்குவதால், எழும்பூர், மாம்பலம், கிண்டியில் மட்டுமே நின்று செல்லும்; பூங்காநகர், கோட்டை நிலையங்களில் நிற்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAAJ68
டிச 22, 2024 17:47

மும்பையில் ஆயிரக்கணக்கான வண்டிகள் ஓடுகின்றன அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம் தமிழகத்தில் ஏற்கனவே போதுமான அளவு ரயில்கள் போடவில்லை


M Ramachandran
டிச 22, 2024 13:07

குரங்கு அப்பம் பங்கிட்ட கதைய்ய தான்


jayvee
டிச 22, 2024 12:17

பொதுஜனங்களிடம் தட்கல் பிரிமியம் தட்கல் என்று காலியாக செல்லும் ரயிலுக்கு பகல் கொள்ளையடிக்கும் ரயில்வே துறையிடம் போதுமான அளவு ரயில் பேட்டிகள் இல்லை.. இந்த லட்சணத்தில் வெந்தய பாரத் நொந்தய பாரத் என்று தினம் ஒரு நாடகம்..


கிஜன்
டிச 22, 2024 05:00

இப்படி ஒரு அவஸ்த்தையா .... காலையில் புதுச்சேரி-எழும்பூர் ரயிலில் பயணம் செய்து பாருங்கள் ... இன்னும் 10 கோச் அந்த வண்டிக்கு தேவைப்படுகிறது ....


சமீபத்திய செய்தி