உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரானுக்கு புதிய அதிபர் மசூத் பெசஷ்கியான்

ஈரானுக்கு புதிய அதிபர் மசூத் பெசஷ்கியான்

டெஹ்ரான்: ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதியான மசூத் பெசஷ்கியான் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல்

ஈரானின் அதிபராக இருந்த முகமது ரெய்சி, ஜூன் 15ல் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அதிபர் பதவிக்கு அங்கு ஜூன் 28 ல் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், சீர்திருத்தங்களுக்கு ஆதரவான மசூத் பெசஷ்கியான்,மொத்தமுள்ள 2.45 கோடி ஓட்டுகளில், 1.04 கோடி ஓட்டுகளை பெற்றார். பழமைவாதியான அணு ஒப்பந்தத்தில் பங்கேற்ற முன்னாள் தலைவர் சயீத் ஜலீலி, 94 லட்சம் ஓட்டுகளை பெற்றார்.பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலஸிபாப், 33 லட்சம் ஓட்டுகளையும், ஷியா மதக் குருவான முஸ்தபா போர்மொகம்மதி, 2.06 லட்சம் ஓட்டுகளும் பெற்றனர்.

வெற்றி

ஈரான் நாட்டு சட்டத்தின்படி மொத்த ஓட்டு களில், 50 சதவீதம் பெற்றவர்களே அதிபராக பதவியேற்க முடியும். இதனால், இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று(ஜூலை05) நடந்தது. இதில், முதல் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் போட்டியிட்டனர். இரண்டாவது கட்ட தேர்தலில் 3.05 கோடி ஓட்டுகள் பதிவாகின. இதன் முடிவில் பெசஷ்கியான் வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

அதிகாரம்

பெசஷ்கியானுக்கு 1.63 கோடி ஓட்டுகளும், ஜலீலுக்கு 1.35 கோடி ஓட்டுகளும் கிடைத்தது எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. பெசஷ்கியான் ஈரான் சுகாதார அமைச்சராக பதவி வகித்து உள்ளார். ஈரான் அதிபருக்கு என சிறப்பு அதிகாரம் இருந்தாலும், ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கொமோனிக்கு தான் அதிக அதிகாரம் உள்ளது. முக்கிய விவகாரங்களில் அவர் ஒப்புதல் அளித்தால் தான் அது நடைமுறைக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

nizam
ஜூலை 07, 2024 11:46

இப்போ நடந்த தேர்தல் மட்டும் என்ன வாழுது சிறுபான்மையினரை ஒரு பிரதமர் உலகில் வரலாற்றில் உலகில் முதல் முறையாக தரை ரேஞ்சுக்கு பேசியது மட்டும்


ஆரூர் ரங்
ஜூலை 06, 2024 14:02

ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. எனவே புதிய அதிபர் ஆண்களுக்கும் பர்தா கட்டாயம் என சட்டம் கொண்டு வரவேண்டும்.


தத்வமசி
ஜூலை 06, 2024 13:07

யாரோ ஒருவர் அந்த நாற்காலியில் அமர வேண்டும். உலகுக்கும் தேர்தல் நடந்தது போல காட்டிக் கொள்ள வேண்டும். நடக்கட்டும்.


மேலும் செய்திகள்