உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்கு விபரங்கள் தர மறுப்பு; ஐகோர்ட்டில் த.வெ.க., வழக்கு

எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்கு விபரங்கள் தர மறுப்பு; ஐகோர்ட்டில் த.வெ.க., வழக்கு

சென்னை: தமிழகத்தில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்குமாறு, மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி, த.வெ.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

த.வெ.க., சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் ஆதித்யசோழன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் தற்போது பதவியில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்குமாறு, கடந்தாண்டு நவம்பர் மாதம், தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது.அதில், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விபரங்களையும் கோரியிருந்தேன். என் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தேன்; ஆனாலும், தகவல்கள் வழங்கப்படவில்லை.பொது மக்கள் நலன் கருதி கேட்கப்பட்ட தகவல்களை தர மறுப்பது, அடிப்படை உரிமை மீறும் செயல். எனவே, தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்க வேண்டும் என, மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
ஜூலை 15, 2025 06:58

இதெல்லாம் ஜெயித்தபின்பு பார்க்கலாம் சாமி. தற்பொழுது கடற்கரையில் வரும் மக்களை அதட்டி, மிரட்டியடித்து பணம் / பொருள் புடுங்கும் காக்கிச்சட்டைகள் மேல் ஏதாவது செஞ்சி தனி மனித உரிமையை காப்பாத்த பாருங்கள். வண்டியில் அறைக்கு கூட்டிச்செல்வதும் நடக்கின்றது. .


Kasimani Baskaran
ஜூலை 15, 2025 04:04

ஊழல் செய்வதில் தமிழகத்தில் பலர் ஒரு பல்கலைக்கழகம் போல செயல்பட்டு இருக்கிறார்கள். நான்காண்டுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி என்கிற விகிதத்தில் கடன் வாங்கி தமிழகத்தை வேறு பக்கத்துக்கு எடுத்துச்சென்று இருக்கும் தீம்க்கா ஊழலுக்கு பல்கலை போன்றது.


xyzabc
ஜூலை 15, 2025 03:14

சபாஷ் த வெ க. இது ஒரு கன்னி தீவு சிந்துபாத் கதை. கப்பல் பாலு, எ வ வேலு, ஜகத், நேரு.. இவர்கள் வீடுகள் அலிபாபாவின் தங்க சுரங்கம்.


M Ramachandran
ஜூலை 15, 2025 01:09

முதலில் உஙக கட்சியை தலை வர் ஜோசப்பு விஜய் உத்தமாரா? வருமான வரி அயல் நாட்டு காருக்கு செலுத்த வேண்டிய உட்பட அரசைய்ய ஏமற்றாமல் ஒழுங்கா வரி கட்டினாரா? அப்புறம் மற்றவஙக முதுகை சொரியலாம். எல்லா சொரியாரிஸ்டுகளும் ஒரு மாதிரி குண நலமுள்ளவர்கள்.


சிட்டுக்குருவி
ஜூலை 15, 2025 01:00

ஒரு முக்கிய முதன்மையான செயல் .அப்போதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தமுடியும். மக்கள் ஊழல் அரசியல்வாதிகளை களை எடுக்க முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை