உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனைகளில் காப்பீடு எண் பதிவு செய்வது இனி கட்டாயம்

மருத்துவமனைகளில் காப்பீடு எண் பதிவு செய்வது இனி கட்டாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் அனைத்து நோயாளிகளின் காப்பீட்டு விபரங்களை பதிவு செய்யுமாறு, தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.இதுகுறித்து, ஆணையத்தின் தகவல் தொழில்நுட்ப செயலர் பி.ஸ்ரீனிவாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பாக, சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருவோருக்கு, மருத்துவமனை சார்பில் வழங்கப்படும் பதிவு எண்ணுடன் சேர்த்து, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அடையாள எண்ணையும் குறிப்பிட வேண்டும்.அதன் விபரங்கள் அனைத்தும், மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கும் போது தணிக்கை செய்யப்படும். அதேநேரம், ஆயுஷ்மான் பாரத் எண் இல்லாவிட்டால், அதை காரணமாக வைத்து சிகிச்சை வழங்கவும் மறுக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்து, ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், மாநில அரசின் காப்பீட்டு எண்ணை வழங்கினால் போதுமானது என்று, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SHANMUGAM
ஜூன் 10, 2024 01:20

அன்புள்ள சகோதரரே, உங்கள் செய்தி மிக அருமை


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 07, 2024 16:10

ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தான் முதன்முதலில் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆரம்பித்தார்கள். அப்பொழுது நான்கு இலட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு திட்டம் இருந்தது. பின்னர் பாஜக மத்திய அரசு இந்த காப்பீட்டு திட்டம் ரூபாய் ஜந்து இலட்சம் இந்தியா முழுவதும் மத்திய அரசின் சிலவிலேயே செய்தார்கள் அப்படி பார்த்தால் தமிழகத்தில் இருக்கும் இந்த காப்பீட்டு திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாநில காப்பீடு ரூபாய் நான்கு இலட்சம் மற்றும் மத்திய அரசின் காப்பீடு ரூபாய் ஜந்து இலட்சம் இரண்டும் சேர்ந்து ரூபாய் ஒன்பது இலட்சம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது ரூபாய் ஜந்து இலட்சம் தான் கிடைக்கிறது. இதன் மூலம் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தமிழக மாநில அரசு தற்போது காப்பீடு திட்டத்திற்கு பணம் ஒதுக்காமல் மத்திய அரசின் நிதியிலேயே காப்பீட்டு திட்டம் வழங்கி கொண்டு உள்ளது. ஆகவே இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டமே. தமிழக அரசு தன் சொந்த தமிழ் மக்களை ஏமாற்றி நான்கு இலட்சம் மருத்துவ காப்பீடு பிடுங்கி கொண்டது. வாழ்க தமிழகம். நாற்பதுக்கு நாற்பது நாளை நமதே தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை