மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
சென்னை:நீர்வளத்துறையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், ஒப்பந்ததாரர் பதிவு ஆன்லைன் முறையில் துவங்கிஉள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த பழனிசாமியின் கட்டுப்பாட்டில் நீர்வளத்துறை இருந்தது. நீர்வளத்துறை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த தாரர்கள் போட்டி போட்டனர். புதிதாக பலரும் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய முயன்றனர்.போட்டிகளை தவிர்க்கும் வகையில், புதிய ஒப்பந்ததாரர் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. ஒப்பந்த தாரர் புதுப்பிப்பு பணிகளுக்கும், பல்வேறு கெடுபிடிகள் போடப்பட்டன.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், நீர்வளத்துறைக்கான ஒப்பந்ததாரர் பதிவு பணிகள் மீண்டும் துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், தி.மு.க.,வினர் பலரும் ஒப்பந்ததாரர் பதிவை துவக்க வலியுறுத்தினர். ஒரு வழியாக, ஆறு ஆண்டுகளுக்கு பின், நீர்வளத்துறையில் ஒப்பந்ததாரர் பதிவு மற்றும் புதுப்பிப்பு பணிகள் ஆன்லைன் வாயிலாக துவக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, அனைத்து துறைகளின் ஒப்பந்ததாரர் பதிவுகளையும் ஒருங்கிணைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
9 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago