உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி உதவி தொகையில் மத ரீதியாக பாரபட்சம்

கல்வி உதவி தொகையில் மத ரீதியாக பாரபட்சம்

தமிழகத்தில், பல்வேறு விதமான ஹிந்து விரோத செயல்கள் நடக்கின்றன. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் கூட, மத ரீதியாக பாரபட்சம் காட்டப்படுகிறது. ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் பலனை, தமிழக மக்களுக்கு சென்றடைய விடாமல், வருவாய் அதிகாரிகளை வைத்து தி.மு.க., அரசு, தடுக்கிறது. இதை, மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றியை தடுக்க, தன் பினாமியான விஜய் வாயிலாக மாய தோற்றத்தை, தி.மு.க., உருவாக்குகிறது. தமிழகத்தில், பழனிசாமியா, ஸ்டாலினா என்ற சூழல் தான் உள்ளது. கமல், தன்னை நம்பி வந்த ரசிகர்களை ஏமாற்றியதுபோல, விஜயும், தன்னை நம்பும் ரசிகர்களை ஏமாளிகளாக்கி விடக்கூடாது. தி.மு.க., கூட்டணி கட்சிகள் எல்லாமே, தி.மு.க.,வாகவே மாறி விட்டன. எல்லா கட்சிகளையும் தி.மு.க., விழுங்கி விட்டது. ஆனால், அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கி விடும் என பொய் பிரசாரம் செய்கின்றனர். - அர்ஜுன் சம்பத், தலைவர், ஹிந்து மக்கள் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !