பெண் வயிற்றில் 5 கிலோ கட்டி அகற்றம்
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலா, 45, என்பவர் வயிற்று வலிக்காக மருத்துவமனை வந்துள்ளார். அவரை டாக்டர் பரிசோதித்தில், வயிற்றில், 5 கிலோ கட்டி இருப்பது தெரிந்தது.ஆனால் அவரது உடல்நிலை ஆப்பரேஷனுக்கு உகந்ததாக இல்லை. இதையடுத்து, அவரை மணப்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்து, உடல்நிலையை சரி செய்து, அண்மையில் வயிற்றில் உள்ள கட்டியை, ஆப்பரேஷன் மூலம் அகற்றி சாதனை படைத்தனர்.இந்த ஆப்பரேஷனை தனியார் மருத்துவமனையில் செய்தால், 6 லட்சம் ரூபாய் செலவாகும். தற்போது, கலா நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவருக்கு சிக்கலான ஆப்பரேஷனை செய்த, மணப்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள் தமிழ்மணி, மஜிதா, விஜயா, மலைத்துரை ஆகியோரை பாராட்டினர்.