உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதண்டாவாதம் பேசாமல் பதில் சொல்லுங்கள்: உதயநிதி ஆவேசம்

விதண்டாவாதம் பேசாமல் பதில் சொல்லுங்கள்: உதயநிதி ஆவேசம்

''பதில் சொல்ல வேண்டிய இடத்தில் த.வெ.க., அரசு இருக்கிறது. எனவே, நான் கேட்ட கேள்விகளுக்கு, விதண்டாவாதமாக பேசாமல், முதல்வர் விஜய் நேரடியாக பதிலளிக்க வேண்டும்,'' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது:

த.வெ.க., அரசு பொறுப்பேற்று, 116 நாட்களில், பெயர் மாற்ற அறிவிப்பும், திட்டங்களை கைவிட்ட அறிவிப்பும் தான் அதிகமாக வந்துள்ளன. 'தாய் மாமன் சீர் திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம்' என, திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளீர்கள். மொத்தமாக, 'தாய் மாமன் காது குத்தும் திட்டம்' என, பெயர் வைப்பதே பொருத்தமாக இருக்கும். கடந்த, 116 நாள், த.வெ.க., ஆட்சியில், 200 கொலைகள், 300 பாலியல் வன் கொடுமை சம்பவங்கள், 10 ஆணவப் படுகொலைகள், 8 காவல் மரணங்கள் உட்பட, 550 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. த.வெ.க., அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அரசு, முதல்வர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த பா.ஜ., தலைவர் மீது வழக்கு பதியவில்லை. பா.ஜ., அடித்தாலும், வலிக்காதது போல இருக்கிறது த.வெ.க., அரசு. மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு எதிராக, நாடு முழுதும் போராட்டங்கள் நடந்தபோதும், சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. மெரினா கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு, த.வெ.க., அரசுதான். சட்டம் -- ஒழுங்கு பிரச்னைகளால், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அரசை நோக்கி கேள்வி கேட்கும் இடத்தில், தி.மு.க., இருக்கிறது. பதில் சொல்ல வேண்டிய இடத்தில் த.வெ.க., அரசு இருக்கிறது. எனவே, நான் கேட்ட கேள்விகளுக்கு, விதண்டாவாதமாக பேசாமல், முதல்வர் விஜய் நேரடியாக பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Bala
செப் 05, 2026 08:02

இவர் மட்டும் நக்கலும் நையாண்டியும் கேள்வி கேப்பார், பதில் மட்டும் நேரடியா சொல்லணுமாம்


kulanthai kannan
செப் 04, 2026 12:57

விதண்டாவாதத்தின் தந்தையே இவரது தாத்தா கருணாநிதிதான்


theruvasagan
செப் 04, 2026 10:41

தண்ட வாதத்துக்கு விதண்டாவாதம்தான் பதில்.


Barakat Ali
செப் 04, 2026 10:27

உங்க பி டீம் உங்களை மாதிரிதானே விதண்டாவாதமா பதில் அளிக்கும் ?? வெள்ளை அறிக்கை கேட்டதுக்கு வெள்ளைப் பேப்பரை காமிச்சதுக்குப் பேரு என்ன ??


Sudha
செப் 04, 2026 10:06

விதண்டாவாதம் அப்படின்னா அர்த்தம் தெரிஞ்சுதா thambi? முள்ளை முள்ளால் எடுக்கணுமாம். பாறாங்கல்லை வெடி வைத்து தகர்க்கணும். அதுதான் நடந்து வருகிறது


முரு
செப் 04, 2026 10:05

அப்புறம் நீ எதுக்கு விதன்பாவாதம் பன்னிக்கிட்டு இருக்குற? ஊழல் பெருச்சாளி


ராமகிருஷ்ணன் பரமக்குடி
செப் 04, 2026 10:02

த வெ க அரசின் அனைத்து திட்டங்களும் திமுகவினருக்கு ஆப்பு வைக்கும் திட்டங்களாக உள்ளது. அதனால் கதறல் அதிகமாக உள்ளது


என்னத்த சொல்ல
செப் 04, 2026 09:47

ஓடிறாதிங்கன்னு சொல்லிட்டு முதல்வர் ஓடிட்டார். எந்த கேள்விக்கும் இன்ட்ராக்ட் பண்ண தெரியல/விரைவா பதில் சொல்ல தெரியல. இதுவே அண்ணாமலையா இருந்தா, உடனுக்குடன் ஸ்பாட் லேயே பதில் சொல்வார். . IQ கொஞ்சம் குறைவா முதல்வர். ஸ்கிரிப்ட் இல்லாமல் பேச தெரியவில்லை. பிஜேபி மீது எந்த விமர்சணமும் வைப்பதில்லை. உதயநிதியை விட, நைநார் நேரடியா முதல்வரையே தாக்கி பேசினார். உதயநிதினா கைது, நைனார்னா கப்சிப்.


sankar
செப் 04, 2026 09:44

ரகசியமாய் வைத்து இருக்கும் நீட் ரகசியம் இன்னும் ரகசியமாகவே இருக்கா தம்பி ? பத்திரமா வச்சிக்க


angbu ganesh
செப் 04, 2026 09:10

நீட்டு ஹிந்தி எதிர்ப்பு இதை வாசியே 5 ஆண்டு காலத்த ஓட்டிட்டு இப்போ பேசறான் போங்கடா அதன் உங்கள தொரத்திட்டங்களே நாட்டுக்கு நல்லதா ஏதாச்சும் செய்யா பாரு இப்பவாச்சும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ