உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரானில் சிக்கியுள்ள மீனவர்கள் மீட்க முதல்வருக்கு கோரிக்கை

ஈரானில் சிக்கியுள்ள மீனவர்கள் மீட்க முதல்வருக்கு கோரிக்கை

ராமநாதபுரம்:தமிழகத்திலிருந்து ஈரானுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள், தங்களை மீட்கக்கோரி, தமிழக முதல்வருக்கு வீடியோ வெளியிட்டுள்ளனர். ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், ஈரானில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஈரான்- - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.தமிழக மீன்வர்கள் அங்கு, 22 நாட்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல், உணவு கிடைக்காமல் மீன்களை பிடித்து சமைத்து சாப்பிட்டு, கடற்கரையில் நிறுத்தியுள்ள மீன்பிடி படகுகளில் தங்கியுள்ளனர். கிஷ் தீவில் தங்கியுள்ள 600 மீனவர்கள் தங்களை மீட்க கோரி, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து, வீடியோ வெளியிட்டுள்ளனர்.அதில், மீனவர்கள், 'இந்திய துாதரக அதிகாரிகள் யாரும் இங்கு வரவில்லை. தாய் நாட்டிற்கு திரும்ப காத்திருக்கிறோம். சிக்கலான நிலையில் தவித்து வருகிறோம். எங்களை விரைந்து மீட்க வேண்டும்' என, கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூலை 01, 2025 04:48

"அப்பா" இருக்கையில் கவலை வேண்டாம். "அப்பாவே" நேரடியாக சென்று அவர்களை மீட்டு வருவார். ஒருவேளை மத்திய அரசு மீட்டு வந்தால், "அப்பாதான் மீட்டு வந்தார்" என்று வாழ்நாள் கொத்தடிமைகளை வைத்து ஸ்டிக்கர் ஒட்டி, கூவச் செய்வார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை