உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது

சென்னை, : ''ரிசர்வ் வங்கியின் பல்வேறு கட்டுப்பாடுகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பொருந்தாது,'' என, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் வங்கிகள், ரிசர்வ் வங்கி வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், நம்முடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் வராது. தமிழகத்தில், 4,750 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அவற்றுக்கு ரிசர்வ் வங்கி வழிமுறைகள் பொருந்தாது. நபார்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம், நிதி ஆதாரத்தை கேட்டுள்ளோம். விவசாயிகள், நெசவாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் போன்றோருக்கு, பல மடங்கு கடன் உயர்த்தி வழங்கப்படுகிறது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் 10,200 கோடி; இரண்டாம் ஆண்டில் 12,300 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.நடப்பாண்டில் 17,000 கோடி ரூபாய் இலக்கு கடன் தர நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு, நகைக்கடன் போன்றவற்றை வழங்க நிதி ஆதாரம் தேவை. எனவே, வாய்ப்பு உள்ள இடங்களில் நிதி கேட்டு பெறுகிறோம். நபார்டு வங்கி புதிதாக நிதி வழங்கவில்லை; ஆண்டுதோறும் கிடைக்கும் நிதி தான். அதை, நடப்பாண்டில் உரிய நேரத்தில் வழங்க கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sathya S
ஜூன் 16, 2025 21:10

இந்திய ரிசர்வ் வங்கியின் முயற்சியால் தான் எனது நகையை மீட்டேன் நன்றி இந்திய ரிசர்வ் வங்கி


Venkatesan Srinivasan
ஜூன் 16, 2025 20:21

கடன் பெறுவது மற்றும் பயனர்களுக்கு கடன் கொடுப்பது மட்டுமல்லாமல் கொடுத்த கடனை வசூலிப்பது பற்றிய செய்திகள் வெளியிட்டால் நல்லது.


Keshavan.J
ஜூன் 16, 2025 13:02

ஏன் என்றால் இந்தியாவில் உள்ள எல்லாம் கூட்டுறவு சங்ககள் பாகிஸ்தானில் இருக்கிறது.


புரொடஸ்டர்
ஜூன் 16, 2025 11:24

ஆட்சி செய்பவர்கள் அனுபவிக்க ரிசர்வ் வங்கி உதவி செய்துள்ளது.


Svs Yaadum oore
ஜூன் 16, 2025 08:31

எந்த காலத்திலும் கூட்டறவு சங்கம் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருந்தது கிடையாது.. அதனால் கொள்ளையடித்து பல சங்கங்கள் திவால் ....இது கூட்டுறவு சங்கம்தான். இது வங்கிகள் கிடையாது.. இவை மாநில கூட்டுறவு சட்டத்தில் செயல்படுபவை.. ரிசர்வ் வங்கி வலியுறித்தினாலும் மாநில அரசு அதை ஏற்பதில்லை... எல்லாம் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க ...


அப்பாவி
ஜூன் 16, 2025 07:16

போலிநகையெல்லாம்கூட வெச்சு கடன் வாங்கலாம். ருசர்வ் பேங்க் ஒண்ணும் கேக்க முடியாது. பவுனுக்கு பத்தாயிரம் சேத்தே கடன் வழங்கலாம்.


Varadarajan Nagarajan
ஜூன் 16, 2025 07:13

நானும் ஒரு விவசாயிதான். இந்த கூட்டுறவு வங்கிகளில் பங்குதாரர்களாகவுள்ள விவசாயிகளின் பங்குத்தொகை எவ்வளவு உள்ளது என்ற விபரம்கூட விவசாயிகளுக்கு தெரிவிக்கப் படுவதில்லை. எப்பொழுதுமே நட்டத்தில் இயங்குமாறு பராமரிக்கப்படும் அரசுத்துறைகளில் இதுவும் ஒன்று. இந்த கூட்டுறவு சங்கங்கள்மூலம் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத்தொகைகூட முறையாக உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை.


raja
ஜூன் 16, 2025 06:40

ஆட்டையை போடனுமுண்ணு முடிவு பண்ணியாச்சு... அப்புறம் ஏதாவது சொல்லி புறங்கை நக்க வேண்டியது தானே...


GMM
ஜூன் 16, 2025 06:20

கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரிசர்வ் வங்கி கட்டுபாடுகள் பொருந்தாது என்றால், யார் கட்டுப்பாட்டிற்குள் வரும் ? நிதி நடவடிக்கை, தேசிய பாதுகாப்பு மாநில கட்டுபாட்டில் வராது. கூட்டுறவு கடன் மற்றும் சேமிப்பு வங்கி என்று இருக்க வேண்டும்.


புதிய வீடியோ