உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை ஐகோர்ட் கட்டுப்பாடு விதித்து உள்ளது.ஊட்டி, கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வந்து செல்வதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த ஐகோர்ட், தினமும் எத்தனை வாகனங்கள் வந்து செல்கின்றன என்பதை கண்டறிய, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை தொடங்க உத்தரவிட்டது.அதன்படி இ-பாஸ் வழங்கும் முறை அமலில் உள்ளது. வாகன எண்ணிக்கை குறித்த தகவல்களை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி, பெங்களூரு ஐ.ஐ.எம்., ஆகியன ஆய்வு நடத்தி வருகின்றன. இது முடிய காலஅவகாசம் தேவைப்படும் நிலையில், வரும் கோடை விடுமுறையின் போது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாகனங்களை அனுமதிப்பது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aib6jjf0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ' சாதாரண மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானலில் 50 இருக்கைகள் கொண்ட பஸ்களுக்கு கலெக்டர் தடை விதித்து உள்ளார். வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., நடத்தி வரும் ஆய்வு முடிய இன்னும் 9 மாதங்கள் அவகாசம் தேவைப்படும்' எனக்கூறினார்.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: ஊட்டியில் வார நாட்களில் 6 ஆயிரம், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம், கொடைக்கானலில் வார நாட்களில் 4 ஆயிரம், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களை அனுமதிக்கலாம். இந்த கட்டுப்பாட்டில் இருந்து உள்ளூர் வாகனங்கள், விவசாய வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசு பஸ், ரயில் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஏப்., 1 முதல் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும். இதனை அமல்படுத்துவது குறித்து ஏப்.,25ம் தேதி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். மின்சார வாகனங்களுக்கு இ பாஸ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து நகரங்களுக்கு செல்ல மினி மின்சார பஸ்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழன்
மார் 14, 2025 01:10

இதே கட்டுப்பாடுகளை மகா கும்பமேளாவிலும் அமுல்படுத்தியிருந்தால் 38 உயிர்கள் போயிருக்காது எல்லா சட்டங்களும் மக்களுக்காகத்தானே இனியாவது நீதிமன்றங்கள் விழித்துக் கொள்ளுமா?? மீண்டும் ஒரு கேரளா மாநிலத்தில் நடந்த மாதிரி நிலச்சரிவு நடக்கக் கூடாது இயற்கை ஒரு அளவுதான் தாங்கும் மனிதன் தன் சுய லாபத்திற்காக இயற்கையை எல்லை மீறி திருடிவிட்டான் படித்தவன்தான் நிறையவே தவறு செய்கிறான் சுய ஒழுக்கம் இருந்தால் இந்த கட்டுப்பாடுகள் அவசியமே இல்லையே பணத்தாசை யாரை விட்டது??


visu
மார் 14, 2025 09:08

கும்பமேளாவும் இதுவும் ஒன்றா? அது பலவருடங்களுக்கு பின் ஒரே முறை நடப்பது இது வருட வருடம் நடப்பது 62 கோடி பேர் போன இடத்தில இப்படி நடந்துள்ளது இங்க அதிக பட்சம் 10 ஆயிரம் பேர் ஒருநாளைக்கு அதுக்கு இவ்வளவு குழப்பம்


Gopi
மார் 22, 2025 12:15

நடுநிலை அற்ற கருத்து


பெரிய ராசு
மார் 13, 2025 23:41

குற்றாலத்திரு விதிக்கவேண்டும் குடிகாரனுக்கு பொறம்போக்குக பாட்டிலை குடிப்பது குடிப்பது சுற்றுசூழலுக்கு கேடு விளைவிப்பது


Nagarajan D
மார் 13, 2025 22:46

அறிவு இருக்கா உங்களுக்கு சென்றவருடமே சுற்றுலாவை மட்டுமே நம்பி வாழும் ஊட்டி கொடைக்கானல் ஆகிய ஊர்களில் இதனால் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.. உங்க e pass முறையை குப்பையில் போடுங்க.. அப்ளை செய்யும் அனைவருக்கும் பாஸ் கிடைத்துவிடுகிறது பிறகு எதற்கு இந்த தேவையில்லாத ஒரு நடைமுறை. ஒழுங்காக ரோடு போட ஒரே ஒரு உத்தரவு போடுங்க


Ramesh Sargam
மார் 13, 2025 19:44

இதே போன்ற கட்டுப்பாடுகள் மற்ற சுற்றுலா இடங்கள், கோவில் இருக்கும் நகரங்களில் கூட விதிக்க வேண்டும்.


Seshadri
மார் 13, 2025 19:00

நல்ல முயற்சி… நல்ல வழிகாட்டுதல்… ஆனால் இதை செய்வதற்கு தானே அரசாங்கம்? நீதிமன்றம் வழிகாட்டுதல் என்பது இந்த அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. வாழ்க நீதிமன்றம்


Nagarajan D
மார் 13, 2025 22:52

உபயோகமில்லாத ஒரு உத்தரவு தான் இது. அப்ளை செய்யும் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு முறைக்கு எதற்கு இந்த பில்ட் அப்பு ...இவனுங்களால ஒரே உத்தரவு மூலம் ரோடுகளை ஒழுங்காக போட சொல்லமுடியும் அதை ஏன் போடமாட்டேங்கிறாங்க...


Raj
மார் 13, 2025 18:17

சொந்த நாட்டில் சுற்றுலா செல்வதற்கு சுதந்திரம் கிடையாது.


ديفيد رافائيل
மார் 13, 2025 20:17

சுற்றுலா போகனும்னா போற இடத்தை சுத்தமா வச்சுக்கனும், அசுத்தமாக்குனா இப்படி தான் சொந்த நாட்டில் நிறைய condition போடுவாங்க. Self discipline இருந்து சுத்தமா வச்சுகிட்டா யாருக்குமே எந்த பிரச்சினையுமே இருக்காது.


சமீபத்திய செய்தி