உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.,வில் ஐக்கியம்

ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.,வில் ஐக்கியம்

சென்னை: ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.,வில் இணைந்தார். அவர் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.தி.மு.க.,வைச் சேர்ந்த ஶ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஶ்ரீதரன், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை டாக்டர் மரிய வில்சன், மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் த.வெ.க.,வில் இணைந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=81g8dz21&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் இன்று த.வெ.க.,வில் இணைந்தார். அவர் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியினர் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டசபை தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மிக்க மகிழ்ச்சி!

த.வெ.க.,வில் இணைந்த பிறகு, ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் வெற்றியை தாண்டி ஒரு, அடிப்படை சமூக அரசியல் மாற்றத்திற்காக தலைவர் (விஜய்) எடுத்திருக்கும் உன்னத பணியில், என்னையும் இணைத்துக் கொண்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.இத்தனை வருடம் பார்த்து விட்டோம். ஒரு மாற்றம் தேவை. அதற்கு தான் சாதாரண மனிதனாக இந்த முடிவை எடுத்து உள்ளேன். உண்மையான கொள்கை பிடிப்பை த.வெ.க., வில் தான் பார்க்கிறேன். உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் இருக்கிறது. மக்களுக்கு மேலும் சேவை செய்ய அரசியலுக்கு வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 09, 2025 22:14

எல்லா பாவாடை எல்லாம் ஒரு அணி , இப்படி தான் அண்ணாமலை இன்றுவரை வார் ரூம் அரசியல் செய்கிறார் அதே விஜய் , வார் ரூம் லைக் தரும் வோட்டு தாராதே


vivek
ஜூன் 10, 2025 00:19

துருவேஷ் அம்மா அப்பா கரெக்டாதான் பேரு வச்சு இருக்காங்க.. துர் புத்தி


தமிழ்வேள்
ஜூன் 09, 2025 21:57

திருச்சபை தானம் செய்த சில்லறை கண்களை உறுத்துகிறது என்பதால் அதை ஆட்டையை போட முயற்சி செய்யும் கும்பல் போல உள்ளது...ஒருக்கால் அந்த வேலைக்காக திருச்சபைகளே இந்த மாதிரியான ஆட்களை இறக்கி விட்டு இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...ஆக.... கட்சி குட்டிச்சுவராகப் போகப் போவது சர்வ நிச்சயம்..


தமிழ்வேள்
ஜூன் 09, 2025 21:53

கிரிப்டோக்கள் எல்லாம் சப்ஜாடாக ஒரே கும்பலாக ஒன்று சேருகிறதுகள்....பல திருச்சபை கும்பலும் ஒரே பக்கத்தில் இருப்பதால், எந்த சபை கும்பல் டாமினேஷன் அதிகம்? என்று ஒரு சண்டை கிளம்பி வாய்ப்பு அதிகம்.. தூத்துக்குடி திருச்சபையின் அங்கியோடு அரிவாள் ஏந்தி தெருவோடு ஓடி சந்தி சிரித்த கதை இங்கும் நடக்கும் போல....ஏதோ இந்த புதிய வரவுகள், டி & கே வுக்காக வி ரோடு மல்லுக்கட்டாமல் இருந்தால் சரி..திருச்சபை பழக்கம், இங்கும் வந்தால்தான் வினை....


V Venkatachalam
ஜூன் 09, 2025 20:14

மேலும் சேவை செய்ய வந்திருக்கிறேன் என்று நிருபர்கள் பேட்டியில் கூறினார். கொள்ளை முதலாளிகளை கூண்டில் அடைப்பாரா? பார்க்கலாம்.


V Venkatachalam
ஜூன் 09, 2025 20:09

அவன் இவன் எல்லாரும் சேர்ந்து மணி லான்டரிங் கேசுல மாட்டாம இருந்தா சரி. மக்களுக்கு நன்மை செய்ய போறோம் அப்படின்னு அரிதாரம் பூசிய கோஷம். பாசிசம் அண்டு பாயாசம். திருட்டு தீய முகவை சின்னதா மிரட்டி . வச்சாங்க. அவ்வளவுதான்.


சிட்டுக்குருவி
ஜூன் 09, 2025 19:14

நல்ல அறிமுகம்தான் .தா ம க வின் முக்கிய கொள்கை லன்ஜ ஒழிப்பு .அதை முதன்மையாக முழுமையாக செய்வார் என நம்பலாம் .


RAJ
ஜூன் 09, 2025 18:59

கட்சி பேரையே ஒழுங்கா வைக்க தெரியாத கட்சில என்னப்பா கொள்கை இருக்கு? படிச்சா புண்ணாக்கு அதுல பொய் சேர்ந்து இருக்க? டேய் .. ..நாலு பேர் கேள்வி கேட்ட .. பெபே பெபே னு நிப்பான்.. அவனை நம்பியாட? சரி விடு.. காசா பணமா?


angbu ganesh
ஜூன் 09, 2025 18:06

அப்போ எவனோ ஒருத்தன் லாட்டரி சீட்டுக்காரன் வந்தானே பவர் எல்லாம் மாறிடுமா ஆமா இவரல்லாம் படிச்சவரா எதுக்கு இவர நம்பி வரணும்


தஞ்சை மன்னர்
ஜூன் 09, 2025 16:40

இந்த அதிகாரி தான் 2020 தாம் ஆண்டு விஜய் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து கணக்கு என்ற வழக்கில் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு நீர்த்து போக காரணமாக இருந்தவர் அப்போது இருந்து இருவருக்கும் நல்ல பழக்கம் இப்போது கனிந்து உள்ளது ஒய்வு க்கு பிறகு வருமானம் வேணுமே இப்படிப்பட்டவர்களுக்கு பென்ஷன் கொடுக்க வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கவேண்டும்


sasidharan
ஜூன் 09, 2025 16:10

எல்லோருக்கும் சீட் CONFIRM , இதற்குத்தானே ஆசைப்படுகிறாய் பாலகுமாரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை