உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருப்பி அனுப்பப்பட்ட உளவுத்துறை எஸ்.பி.,க்கள்

 திருப்பி அனுப்பப்பட்ட உளவுத்துறை எஸ்.பி.,க்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உளவுத் துறைக்கு நியமிக்கப்பட்ட இரண்டு எஸ்.பி.,க்கள், மீண்டும் அவர்கள் பணிபுரிந்த பழைய இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய இருப்பதால், அதற்கான பதவி ஏற்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, அரியலுார் மாவட்ட எஸ்.பி., விஸ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., அரவிந்த் ஆகியோர், மாநில உளவுத் துறைக்கு சிறப்பு பணியாக நியமிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை, தேர்தல் கமிஷனால் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்ட சந்தீப்ராய் ரத்தோட் பிறப்பித்து இருந்தார். அதேபோல, த.வெ.க., தலைவர் விஜய் வீட்டில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, வேலுார் டி.ஐ.ஜி., தர்மராஜனும் சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால், புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு எஸ்.பி.,க்களையும், தற் போது உளவுத்துறை டி.ஜி. பி.,யாக உள்ள பாலநாகதேவி ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 'என்னிடம் ஆலோசனை கேட்காமலும், உள்துறை ஒப்புதல் இன்றியும், முறையற்ற வகையில் இரண்டு எஸ்.பி.,க்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்' என கவர்னருக்கும் தலைமைச் செயலருக்கும் பாலநாகதேவி கடிதம் எழுதி உள்ளார். இதையடுத்து, விஸ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி மற்றும் அரவிந்த் ஆகியோர், மீண்டும் அவர்கள் பணிபுரிந்த மாவட்டங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். வேலுார் டி.ஐ.ஜி., தர்மராஜனும் சிறப்பு பணியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால், அவர், வேலுாருக்கு செல்லாமல் விடுமுறையில் இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rathna
மே 09, 2026 17:14

நேர்மையானவர்கள் பந்தாட படுவது அரசு பணியில் இயல்பு.


Kasimani Baskaran
மே 09, 2026 06:42

இவர்கள் செய்யும் வேலைக்கு உழவு செய்ய அனுப்பினாலாவது நாலு விவசாயிகள் பயன் பெறுவார்கள்.


rama adhavan
மே 09, 2026 07:33

தெரியாத வேலைக்கு அனுப்பினால் உழவும் கெடும். இவர்களுக்கு அடுத்தவர்களை அதிகாரம் செய்ய மட்டும் தான் தெரியும்.


Palanisamy Sekar
மே 09, 2026 04:01

படித்தும் பலனில்லையோ ? பந்தாடப்படுகின்ற காட்சிகள் சிவில் சர்வீஸின் தகுதியா என்ன? ஈகோ படித்தவர்களிடம்தான் அதிகம் இருக்கும் என்கிற செய்திகள் பொய்யல்ல என்பதை இங்கே காண்கின்றோம். வீட்டு வேலைக்கும் பந்தல் போட்டு விழா ஏற்பாடு செய்வதற்கும் உளவுத்துறையா ஆச்சர்யமாக இருக்கின்றதே.


V S Venkataramani
மே 09, 2026 08:25

Theres no ego when the command comes from political bosses