புறக்கணிப்பு போராட்டம் வருவாய் துறையினர் வாபஸ்
சென்னை: வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், இன்று முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் பணியில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். ஊழியர்களின் ஒன்பது அம்ச கோரிக்கையை, அரசு ஏற்றுக் கொண்ட நிலையில், முகாம் பணிக்கு செல்ல ஒப்புதல் அளித்துள்ளனர். வ ருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பான, 'பெரா' சார்பில், கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை, கடந்த மாதம், 25 முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் பணியை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி, 10 நாட்களாக, ஊழியர்கள் முகாம் பணிக்கு செல்லாத நிலையில், வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமையில், நேற்று முன்தினம் பே ச்சு நடத்தப்பட்டது. இதில் , ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான, கருணை அடிப்படையில் பணி நியமனம், பணி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், இன்று முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் பணியில் ஈடுபடுவதாக ஊ ழியர்கள் அறிவித்துள்ள னர். இதுகுறித்து, அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணை ப்பாளர் முருகையன் கூறியதாவது: எங்களது பிரதான கோரிக்கையான, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் சனிக்கிழமை நடப்பது ரத்து செய்யப்பட்டதோடு, மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அவகாசம், 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எங்களின் நீண்ட கால கோரிக்கை யான, ஜூலை 1ம் தேதியை, 'வருவாய் துறை தினம்' என அறிவிப்பது தொடர்பாக, அரசாணை வெளியிடுவதாக, அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதேபோல, ஊழியர்களின் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் மற்றும் கருணை பணி நியமனம் குறித்த ஆணைகள் வெளியிட, இரண்டு மாதம் அவகாசம் கேட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.