உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இசையுடன் இணைந்த விழா

இசையுடன் இணைந்த விழா

சென்னை: சென்னையில் உள்ள ஜஸ் டிரம்ஸ் என்ற இசைப் பள்ளியின் 9வது ஆண்டு விழா நடைபெற்றது. வாணி மகாலில் நடைபெற்ற இந்த விழாவில் சமீபத்தில் படிப்பை முடித்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மழையை மையமாகக் கொண்டு முதல் நிகழ்ச்சியைத் துவக்கினர். டிரம்ஸ் மூலம் மின்னல் மற்றும் இடி ஓசைகளை அவர்கள் எழுப்பி, அரங்கில் இருந்தவர்களை அசர வைத்தபோது, வெளியே உண்மையிலேயே மழை துவங்கியது. தொடர்ந்து திரைப்பட பாடல்களைப் பாடினர். சில திரைப்பட பாடல் காட்சிகள் ஒலியின்றி திரையிடப்பட, அவற்றுக்கேற்ப இசை வாசித்தனர். நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை