உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரிகளில் முளைத்த நெல்; தி.மு.க., அரசின் சாதனை

லாரிகளில் முளைத்த நெல்; தி.மு.க., அரசின் சாதனை

வெளிமாவட்ட அரிசி அரவை ஆலைகளுக்கு, ரயில்களில் அனுப்புவதற்காக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு, லாரிகளில் கொண்டு வரப்பட்ட, 36,000 நெல் மூட்டைகள், 11 நாட்களாகியும் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால், மழையில் நனைந்து, முளைக்க துவங்கியுள்ளன. இதுதான் தி.மு.க., அரசின் சாதனை. இப்போதும் கூட, அந்த நெல் மூட்டைகளை அனுப்ப, எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதே நிலை நீடித்தால், அந்த நெல் பயன்படுத்த தகுதியற்றதாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பதில், தி.மு.க., அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. கும்பகோணம் ரயில் நிலையத்தில், முளைத்த நிலையில் லாரிகளில் இருக்கும் நெல் மூட்டைகள், பயன்பாட்டுக்கு உகந்தவையா என ஆய்வு செய்ய வேண்டும். பயன்படுத்த முடியும் என்றால், உடனடியாக அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும். - அன்புமணி தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 28, 2025 07:57

நடமாடும் மருத்துவமனை, நடமாடும் நூலகம், நடமாடும் ATM, போல நடமாடும் விவசாயம் என்று புதியதாக திமுக முயற்சி. வயிறு எரிகிறது அவ்வளவு நெல்மணிகள் வீண் ஆகியிருப்பது பார்த்து. திருந்தமாட்டார்கள் இந்த திமுகவினர். துரத்தவேண்டும் அவர்களை தமிழகத்தை விட்டே.


Indian
அக் 28, 2025 07:21

பா ஜா ஆட்சி செய்தால் முளைக்காதா?? காய்ந்து போய்விடுமா


Ramesh Sargam
அக் 28, 2025 07:52

பாஜக ஆட்சியில் இதுபோன்று நடக்க வாய்ப்பே இல்லை. சும்மா ரூ. 200 வாங்கிண்டோமா, சும்மா போனோமா என்று இருக்கவேண்டும்.


புதிய வீடியோ