உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு வாரமாக ராக்கெட் வேகம்; தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 சரிவு

ஒரு வாரமாக ராக்கெட் வேகம்; தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, இன்று(அக்.,24) சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ. 58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கடந்த சில தினங்களாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது.தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் அக்டோபர் 18ம் தேதி , 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,240 ரூபாய்க்கும்; சவரன் 57,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 105 ரூபாய்க்கு விற்பனையானது.* அக்.,19ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 58,240 ரூபாய்க்கு விற்பனையானது. அக்.,20ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.* அக்.,21ம் தேதி திங்கள் கிழமை, சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.7,300க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.58, 400க்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்.,22ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை.* நேற்று (அக்.,23) சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.7,340க்கும், சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று(அக்.,24) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.7,285க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், வழக்கத்தை விட, தங்க நகைகள் விற்பனை வெகு ஜோராக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Dharmavaan
அக் 24, 2024 14:31

இந்த சிறிய குறைவை வீழச்சி என்பது தவறு ஏமாற்று பேச்சு


Muthu Kumaran
அக் 24, 2024 13:53

அப்படியே போய் ஒரு பத்து கிலோ தங்கம் வாங்கி வந்து விடலாம் . நகை விலை வீழுச்சி அடைந்து விட்டது


Ramesh Sargam
அக் 24, 2024 12:41

ராக்கெட் விஞ்ஞானிகளுக்கும், நகை வியாபாரிகளுக்கும் இடையே இப்பொழுது கடும் போட்டி. நீ ராக்கெட்டை மிக உயந்த இடத்திற்கு செலுத்துகிறாயா, அல்லது நாங்கள், நகை வியாபாரிகள் தங்கத்தின் விலையை உங்கள் ராக்கெட்டை விட அதிக உயரத்திற்கு நிர்ணயிக்கிறோமா என்கிற போட்டி. அநேகமாக நகை வியாபாரிகள் இந்த போட்டியில் வெற்றிபெறுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.


கத்தரிக்காய் வியாபாரி
அக் 24, 2024 12:32

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தங்கத்தை ஒரு பயல் வாங்கி வைக்குறதில்லை. அதற்க்கு பதில் அவர்கள் நாட்டின் அணைத்து மூளை முடுக்கிற்கு தரைவழி சாலை, மின்சாரம், குடிநீர், எரிவாயு அமைத்து தொழில் வளத்தை பெருக்குகிறார்கள். அதனால் அவர்கள் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.


sundarsvpr
அக் 24, 2024 11:19

விலைவாசி எற எற அரசு அக விலை படியை அரசு ஊழியர்களுக்கு நிர்ணயம் செய்து வழங்குகிறது. தங்கம் விலையை வைத்து ஏன் அகவிலைப்படி நிர்ணயம் செய்யக்கூடாது.?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை