உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருத்தாசலம் அருகே ரவுடி வெட்டி கொலை

விருத்தாசலம் அருகே ரவுடி வெட்டி கொலை

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்குடல் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 26; டிரம்ஸ் இசைக்கலைஞர். இவர், கடந்த 17ம் தேதி இரவு நண்பர் மகேந்திரன் என்பவருடன் சாலை நடுவே மொபட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற கார்குடல், கிழக்கு தெரு விஜய், இதை தட்டிக்கேட்க, வாக்குவாதம் ஏற்பட்டது. விஜய், தன் சித்தப்பா மகன் சுந்தரேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர், ஆகாஷிடம் மொபைல்போனில் பேசி சமரசம் செய்தார். 18ம் தேதி இரவு, விஜய் தன் ஆதரவாளர்களுடன் ஆகாஷ் வீட்டிற்கு சென்றார். அவர் இல்லாததால், அவரது மனைவி சவுமியாவை மிரட்டினார். இந்நிலையில், கச்சேரிக்கு சென்று நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டிற்கு வந்த ஆகாஷிடம், சவுமியா நடந்த சம்பவம் குறித்து கூறினார். ஆத்திரமடைந்த அவர், தன் நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன், சரவணன், ஜீவன், பழனி ஆகியோருடன் விஜய் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். இருதரப்பும் தாக்கிக் கொண்டனர். ஆகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரேஷ்குமார், வசந்தராஜ், அஜித்குமார் ஆகியோரை காது, தொடை பகுதிகளில் வெட்டினார். அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கிய விஜய், ஆகாஷின் கன்னம், தலையில் வெட்டினார். படுகாயமடைந்த ஆகாஷ், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இறந்தார். சுந்தரேஷ்குமார், வசந்தராஜ், அஜித்குமார் சிகிச்சை பெற்றனர்.விருத்தாசலம் போலீசார், சுந்தரேஷ்குமார், வசந்தராஜ், அஜித்குமார் ஆகியோரை பிடித்துவிசாரிக்கின்றனர். தலைமறைவான விஜயை தேடி வருகின்றனர். ஆகாஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை