சாலை சீரமைப்புக்கு ரூ.1,000 கோடி திட்டம்
சென்னை:விரிவாக்கப்பட்ட நகரப் பகுதிகளில், சாலை சீரமைப்பு பணிகளை, 1,000 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது.நம் மாநிலத்தில், 400க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. இவற்றில், சாலை கட்டமைப்புகள் போதிய அளவில் இல்லை. நகரப்பகுதிகளுடன் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்பட உள்ள ஊரக பகுதிகளில், சாலைகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக, 1,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, விரிவாக்கம் செய்யப்பட்ட நகரப்பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த, திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.