உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

'ஆப்பரேசன் சிந்துார்' என்ற மிகப்பெரிய வெற்றிக்கு பின், பிரதமர் மோடி தமிழகம் வந்து, துாத்துக்குடியில் 452 கோடி ரூபாய், மதிப்பில், விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளார். மேலும், தமிழகத்தில், 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த திட்டங்களை அர்ப்பணித்துள்ளார். தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி கொடுக்கிறார். கடந்த 2014 ல் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து இதுவரை, தமிழகத்துக்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி உள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக நல்ல திட்டங்களை தருவதோடு, தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தை உலகம் முழுதும் மோடி எடுத்து செல்கிறார். - முருகன் மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஜூலை 27, 2025 04:54

ஹல்லோ, அது தமிழகத்துக்கான ஒதுக்கீடு இல்லை. கோபாலபுரம் குடும்பத்துக்கான ஒதுக்கீடு.


P. SRINIVASAN
ஆக 01, 2025 10:49

பிஜேபிக்கு மணி அடிக்கிறதா நிறுத்திட்டு உண்மையை பேசு