உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணிகளுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விபரம் பின்வருமாறு:* தனுஷ்கோடியில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j4dth1ok&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* கடல்சார் அறக்கட்டளை ரூ.50 கோடியில் உருவாக்கப்படும்.* கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் கொண்டு வரப்படும்.* சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலையம்- கிளாம்பாக்கம் (ரூ.9,335 கோடி ஒதுக்கீடு)* கோயம்பேடு- பட்டாபிராம் (ரூ.9,744 கோடி ஒதுக்கீடு)* பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூர் (ரூ.8,779 கோடி ஒதுக்கீடு)* ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணிகளுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு* உரிமையாளர்கள் இல்லாத நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு* தமிழகத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.* இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.673 கோடி நிதி ஒதுக்கீடு.* விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 05, 2025 10:27

இதே போன்ற அறிவிப்புக்களை ஜெ வழங்கியபோது அம்மையார் வாயால் வடை சுடுகிறார் என்று கிண்டல் செய்தவர்கள் இவர்கள் ......


Muraleedharan.M
மார் 15, 2025 20:45

போன பொங்கல் வேட்டி புடவை எங்கே


ஆரூர் ரங்
மார் 14, 2025 16:25

தணிக்கை நிர்வாகக் கட்டணம் என்ற பெயரில் எல்லா ஆலயங்களின் வருவாயில் 14 சதவீதம் வரை எடு‌த்து‌க் கொண்டு அதில்தான் இந்தத் திட்டம் . அரசு வருவாயில் ஒரு ₹ கூட ஒதுக்குவதில்லை. ஆனால் எல்லாம் திமுக வின் சாதனையாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள். வெட்ககேடு.


Mr Krish Tamilnadu
மார் 14, 2025 14:32

நிறைய கும்பாபிஷேகங்கள் எல்லா கோயில்களிலும் தமிழகம் முழுக்க வேகம் வேகமாக நடைபெறுகின்றன. இப்போது புரிகிறது பட்ஜெட் ஒதுக்கீடு. நாய்கள் கருத்தடைக்கு- மாடு, நாய் காப்பகம் அமைக்கலாம். தெருக்களில் மாடு முட்டும் யூ டியூப் விடியோக்கள் வராமல் இருக்கும்.


B MAADHAVAN
மார் 14, 2025 14:13

மசூதியில் இருக்கும் இமாம்களுக்கும், மசூதிகள் வளர்ச்சிக்கும், கிறிஸ்தவ தேவாலயங்கள் செப்பனிடவும் எத்தனை கோடிகள் பொதுப் பணத்திலிருந்து செலவிடப் படுகிறது. மசூதி, தேலயங்களில் இருந்து வருமானம் அரசிற்கு எவ்வளவு வருகிறது என்று முதலில் கணக்கு சொல்லட்டும். ஹிந்து கோவில் செப்பனிட ஒதுக்கும் பணம் பொது வருவாயிலிறுந்து செலவிடப் படுகிறதா அல்லது கோவில்களின் வருவாயில் இருந்து செலவிடப் படுகிறதா என்று தெளிவாக சொல்லட்டும். கோவில் வரும்படியில் பெரும்பகுதி உண்மையில் அரசியல் வியாதிகளின் உற்றார் உறவினர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி சம்பளம் தருவதற்கும், ஒரு பகுதி அரசியல்வாதிகளின் சொந்த லாபத்திற்கும், சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் பயன் படுத்தப் படுகிறது. பகுத்தறிவு வியாதிகளின் பிறந்த நாள் அன்று பெரும்பாலான கோவில்களில் வழங்கப் படும் அன்னதான செலவுகளும், ஊர் மக்கள் சேர்ந்து நடத்தும் கும்பாபிஷேக வைபவ செலவுகள் அனைத்தும் எப்படி கணக்கில் எழுதப் படுகின்றன என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். இதுதான் எங்கள் உண்மையான திராவிஷ மாடல் என்று உன்னதமான அழகு டமிலில் உரக்கச் சொல்வோம்... வால்க டமில்...


Svs Yaadum oore
மார் 14, 2025 13:29

தனுஷ்கோடியில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்படுமாம் ... ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான 17 கி.மீ ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடியல் அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.. விடியல் மதம் மாற்றிகள் அந்த திட்டத்தை முடக்கி விட்டார்கள் ....இப்பொது பறவைகள் சரணாலயம் மட்டும் எப்படி சாத்தியமாம் ?? தனுஷ்கோடி ஆன்மிக சுற்றுலா மையமாக உருவாகக்கூடாது என்ற விடியல் மதம் மாற்றிகள் சூழ்ச்சிதான் இது ...


Sivagiri
மார் 14, 2025 13:15

கோவில் திருப்பணிகள், பெரும்பாலும், அனைத்துமே உபயதாரர்கள், பக்தர்கள் காணிக்கைகள் மூலம்தான் நடக்கும், ஆனால் அதற்கு அனுமதி அளித்து, கண்காணிக்க, கடைசியில் தன் பெயரை பப்லிசிடி பண்றதுக்கு அரசு பணம்?. . ஸ்வாஹா ஸ்வாஹா . .


Jayakumar Vilvaraj
மார் 14, 2025 12:59

இந்தியாவில் 1000 ஆண்டுகள் பழமையான தேவாலயங்களோ இல்லை மசூதிகளோ இல்லை.. தேவாலயங்கள் அதிகபட்சம் 100, 150ஆண்டுகள் மற்றும் மசூதிகள் 300 லிருந்து 500 ஆண்டுகள் தான் இருக்கும்... அதற்க்கு முன்பு இங்கே அனைவரும் இந்துக்கள் தான்... மேலும் தாங்கள் தேவாலயத்துக்கும், மசூதிக்கும் நிதி ஒதுக்கி இருப்பார்கள் என்று கூறியது உண்மையே..


Nandakumar Naidu.
மார் 14, 2025 12:54

எல்லாம் வாயில் வடை சுடும் வீரர்கள் தான்.


sridhar
மார் 14, 2025 12:35

திருச்சியில் கடல் கட்டப்படும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை