உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரிகளுக்கு ரூ.152 கோடி ஒதுக்கீடு

கல்லுாரிகளுக்கு ரூ.152 கோடி ஒதுக்கீடு

சென்னை: அரசு கல்லுாரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 152.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகள் போன்றவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, கடந்த 2022 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்க, நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டுகளில் பணிகள் நடந்தன.நடப்பு கல்வியாண்டில், 31 கலை அறிவியல் கல்லுாரிகள், 12 பாலிடெக்னிக்குகள், ஆறு பொறியியல் கல்லுாரிகளில், ஆய்வகங்கள், வகுப்பறைகள், இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 152.97 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி