உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.200 கோடி கடன் மோசடி: ஜெ., தோழி சசிகலா பினாமி வீட்டில் ஈ.டி., ரெய்டு

ரூ.200 கோடி கடன் மோசடி: ஜெ., தோழி சசிகலா பினாமி வீட்டில் ஈ.டி., ரெய்டு

சென்னை: வங்கியில் 200 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது மற்றும் பினாமி சொத்துக்கள் தொடர்பாக, சென்னை மற்றும் ஹைதராபாதில், சசிகலாவின் பினாமி வீடு உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் தினகரன், திவாகரன் வீடு, அலுவலகம் என 197 இடங்களில், 2017ல் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு நாட்கள் சோதனை நடத்தினர். கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த, சசிகலாவின் பினாமியான மார்க் குழுமத்தின் தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.இதில், ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, 2016ல், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பத்மாவதி சர்க்கரை ஆலையை, சசிகலா 450 கோடி ரூபாய் செல்லாத நோட்டு கொடுத்து, பினாமி பெயரில் வாங்கியது தெரிய வந்தது.அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் நடத்திய தொடர் விசாரணையில், சசிகலாவின் பினாமிகள், 200 கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்தது, பினாமிகள் பெயரில் சசிகலா சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மோசடியில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியாகி உள்ளது.இது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, சென்னை மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள சசிகலாவின் பினாமி வீடு மற்றும் மொத்த நகை வியாபாரிகள் வீடு என, ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடத்தினர். சென்னை சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியில் உள்ள சசிகலாவின் பினாமியான, மார்க் குழுமத்தின் இயக்குநரான ராமகிருஷ்ண ரெட்டி வீடு, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தங்க நகை மொத்த வியாபாரியான மோகன்லால் காத்ரி வீடு, சவுகார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடந்தது. சோதனையில், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Natchimuthu Chithiraisamy
செப் 19, 2025 16:59

எல்லாம் சசிகலாவின் குழந்தைகள் பிஜேபி ஆட்சல் கூட


S.L.Narasimman
செப் 19, 2025 12:31

இந்த மாதிரியான மோசடி கும்பலை அதிமுகவால் சேர்க்க வேண்டும் என்று அண்ணாமலை பிசெபி வகையிறாக்கள் தொடர்ந்து சொல்லி கொண்டு இருப்பது அவர்களால் இவர்களுக்கு ஆதாயம் பெறப்பட்டுள்ளதான்னு ஐயம் ஏற்படுகிறது.


shyamnats
செப் 19, 2025 12:21

30000 கோடி டாஸ்மாக் ஊழல் அப்படினு சொல்லிய செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையே தடுமாறிக்கிட்டிருக்கு,. இதுல 200 கோடி ஒரு செய்தியா தெரியல. நீதிமன்றம் வேற குறுக்கு சால் ஒட்டிக்கிட்டிருக்கு. 3 நாள் முன்னாடிகூட விடியலார் அவருக்கு, கோடு , ரோடு ன்னு சான்றிதழ் குடுத்திட்டிருக்காரு. அமலாக்க துறை விசாரணை ன்னா யாரும் பயப்படுற மாதிரி தெரியல.


VSMani
செப் 19, 2025 11:12

இந்த திருட்டு ஊழல் கும்பலை தினகரனை அண்ணாமலை சந்திக்கப்போறாராம். இந்த திருட்டு ஊழல் கும்பலை அதிமுக வில் எடப்பாடி சேர்க்கணும்னு செங்கோட்டையன் அமித்ஷா சொல்றாங்க. விளங்கிடும்.


தமிழ் நாட்டு அறிவாளி
செப் 19, 2025 10:38

இவங்க சொந்த ஊர்ல குடிக்க தண்ணி கூட ஒழுங்கா கிடைக்காது. அவரசத்திற்கு மன்னார்குடிதான் வரணும். இந்த ஊர் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இவரது தம்பி ஊர்ல மகளிர் கல்லூரி நடத்துகிறார். ஜெயலலிதாவின் நிழலால் இவ்வளவு பினாமி சொத்து. பெரிய தில்லாலங்கடி பொம்பளைய இருக்கும் போலயே?


Mecca Shivan
செப் 19, 2025 10:17

பினாமி என்று தெரிந்தும் அவர்களின் சொத்தை முடக்காமல் விட்டது ஏனோ ?


sankaranarayanan
செப் 19, 2025 09:06

வெறுமனே ஈடியோ கடை வைத்திருந்த இந்த அம்மையாருக்கு இவ்வளவு சொத்தா எங்கிருந்து எப்படி எப்போது சேகரிக்கப்பத்து புலன் விசாரணை முதலிலிருந்தே நன்றாக தொடங்கினால் முழு பூசணிக்காயையும் கண்டு பிடிக்கலாம் இதனால் இன்னும் பலர் சிக்குவார்கள் திசை மாறும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை