மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 1
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 38
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திருடு போன 27 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, வாகனங்கள் மீட்கப்பட்டன; 17 பேர் கைது செய்யப்பட்டனர்.சந்திரசேகரன் எஸ்.பி., கூறியது: தாண்டிக்குடி பகுதியில் சிவகாமியம்மன் சிலையை திருடிய பண்ணைக்காடு ஈஸ்வரன், பாண்டி, அழகேசன் கைது செய்யப்பட்டனர்; அம்மன் சிலை மீட்கப்பட்டது. திண்டுக்கல் முனிசிபல் காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் இருந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் தங்க நகைகள் மீட்கப்பட்டன. பாரதிபுரம் ஜக்கிரியா நகரை சேர்ந்த மாதவனிடம் இருந்து 16 பவுன் நகை; ஆண்டிபட்டியை சேர்ந்த பாலாவிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் மீட்கப்பட்டன. மொத்தம் 18 லட்சம் மதிப்பில் 81 பவுன் நகை, வாகனங்கள் மீட்கப்பட்டன. கூடுதல் எஸ்.பி., ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், எஸ்.ஐ., ரமேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர் இவற்றை மீட்டனர், என்றார்.
3 hour(s) ago | 3
3 hour(s) ago | 1
6 hour(s) ago | 38