உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற சுற்றுச்சூழல் இன்ஜி., கைது

ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற சுற்றுச்சூழல் இன்ஜி., கைது

ஓசூர்: தனியார் கிரஷர் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன், 48, கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளராக புருஷோத்தமன் பணியாற்றி வருகிறார்.இவரிடம், மத்துார் அருகே சிவம்பட்டியில் இயங்கும், 'கண்ணன் புளு மெட்டல்' என்ற கிரஷர் நிறுவனம், அனுமதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தது. இதற்கு, 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.பேரம் பேசி, நிறுவன உரிமையாளரான, சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த பிரதாப், 41, என்பவரிடம், 10 லட்சம் ரூபாய் பேசி முடித்து, முதற்கட்டமாக, 3 லட்சம் ரூபாயும், சான்றிதழ் வழங்கியவுடன் மீத தொகையும் தர முடிவானது.லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் செய்தார். இதன்படி, 3 லட்சம் ரூபாயை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், நேற்றிரவு புருஷோத்தமனிடம், பிரதாப் வழங்கினார். அதை பெற்ற போது, புருஷோத்தமன் கையும், களவுமாக பிடிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Va.sri.nrusimaan Srinivasan
செப் 03, 2026 17:53

நல்லது.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 03, 2026 14:58

ஜெயந்தி நடராஜன் மத்தியில் யூபிஏ அரசின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார் ..... அட ஆமாங்க ராஜீவ் காந்திக்கு ரொம்ப க்ளோசு ..... என்டிஏ 2014 இல் ஆட்சிக்கு வந்தவுடன் மேடம் ஜி ஆக்டிவ் பாலிடிக்ஸ் லேயே இல்ல .....


Balan Palaniappan
செப் 03, 2026 09:46

இவனை வேலையில் இருந்து நீக்கி விடுங்கள் சஸ்பென்ஷன் வேண்டாம் பர்மனெண்டாக வீட்டுக்கு அனுப்புங்கள்


Krishna
செப் 03, 2026 08:26

If True, being Grave Offence-Bribery, Physically Break his Hand Besides Prosecution


Krishna
செப் 03, 2026 08:26

If True, being Grave Offence-Bribery, Physically Break his Hand Besides Prosecution


VENKATASUBRAMANIAN
செப் 03, 2026 08:09

இவரது குடும்பத்தையும் பத்திரிக்கைகளில் போய் வேண்டும். அப்போதுதான் குடும்ப உறுப்பினர்கள் இது போன்ற லஞ்ச வாங்குபவர்கள் ஐ தடுப்பார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 03, 2026 07:57

இது போன்ற இலஞ்சப்பேய்களை பற்றிய முதல் நாள் செய்தி மட்டுமே மக்களுக்கு தெரியவருகிறது பிறகு என்ன நடக்கிறது என்பதை ஏன் எந்த பத்திரிக்கையும் வெளியிடுவதில்லை?


Aarbinms
செப் 03, 2026 08:45

திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு ஊடகங்கள் காசுக்கு விலை போனதுதான் காரணம். சன் டிவி புளுகுனர் டிவியில் இத பற்றிய செய்திகள் வராது


Ram pollachi
செப் 03, 2026 06:46

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு வெட்டி எடுப்பார்கள் அங்கு பணி புரிபவர்கள் வாரம் ஒருவராவது கடுமையாக காயம் ஏற்படும் அல்லது மரணம் ஏற்படும், மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம் செலுத்த மாட்டார்கள், வாகன பராமரிப்பு செய்து கொடுப்பவர்களுக்கு அல்வா தரப்படும்.... இயற்கைக்கு சவால் விடும் விதமாக வெடி வைத்து பூமியை நாசமாக்கும் உத்தமருக்கு லஞ்சம் என்றால் பிடிக்காது, பேரம் பேசி நாடகம் ஆடும் இந்த மாதிரி ஆட்கள் தான் இன்றைய கதாநாயகர்கள்..... அரசியல் பின்புலம் இல்லாமல் இந்த தொழிலை செய்ய முடியாது... இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Sampath
செப் 03, 2026 05:49

அவர் இடை கால பாணி நீக்கம் செய்யப்பட்டு சேலம் மாவட்ட அதிகாரியாக இன்னும் 10 நாளில் நியமிக்க படுவார்.


Natchimuthu Chithiraisamy
செப் 03, 2026 13:58

அரசு செம்மையாக செயல் படிக்கிறது என்பதை நிரூபிக்க லஞ்ச துறை செயல் படுகிறது இது அரசுக்கு ஆள் இழப்பு மட்டுமில்லமல் அரசுக்கு பண இழப்பும் ஏற்படுகிறது. வேறு ஆட்களும் போடாமல் அந்த இடத்தில் சேவை இல்லாமல் மக்களுக்கு இடையூறுதான் நடக்கும். 100 எல் 60 பேர் லஞ்சம் வாங்குவது சரி என்பது உள்ளதே என்பார்கள். நடைமுறையை மாற்றுங்கள் காலம் முழுவதும் சம்பளம் இல்லை என்று அரசு ஏன் சொல்லுவது இல்லை வேலை செய்யாமல் சம்பளம் அரசு கொடுத்தே ஆகா வேண்டும் என்று சட்டம் சொல்லுவது தவறு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை