உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 கோவில்கள் திருப்பணிக்கு ரூ.35.87 கோடி ஒதுக்கீடு

15 கோவில்கள் திருப்பணிக்கு ரூ.35.87 கோடி ஒதுக்கீடு

சென்னை: ஆயிரம் ஆண்டுகள் பழமையான, 15 கோவில்களில் இறுதி கட்டமாக 35.87 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்ய, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.'தமிழகத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணி செய்திட, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என, சட்டசபையில், 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் 17ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், 41 கோவில்களுக்கு முதற்கட்டமாக, 62.06 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில், 20 சதவீதத்திற்கு மட்டும், அதாவது, 12.41 கோடி ரூபாயை விடுவிக்க, அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், 1,000 ஆண்டுகள் பழமையான, 15 கோவில்களின் திருப்பணிகளை இறுதி கட்டமாக 36.86 கோடி ரூபாயில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கும்படி அரசுக்கு கருத்துரு அனுப்பினார். இதை பரிசீலனை செய்த அரசு, 15 கோவில்களில், 35.87 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்துள்ளது. கோவில்களின் பணி முன்னேற்றத்தின் அடிப்படையில், தேவைக்கேற்ப நிதி ஒதுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.

நிதி ஒதுக்கப்பட்ட கோவில்கள் விபரம்:

கோவில் - நிதி ஒதுக்கீடு(ரூபாய் கோடியில்)வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்துார், தஞ்சாவூர் மாவட்டம் 2.64விஜயராகவப் பெருமாள் கோவில், திருப்புட்குழி, காஞ்சிபுரம் மாவட்டம் - 0.70புத்திரகாமேஸ்வரர் கோவில், புதுக்காமூர், திருவண்ணாமலை மாவட்டம் - 1.56தானுமாலீஸ்வரர் கோவில், வெள்ளாஞ்சார், புதுக்கோட்டை மாவட்டம் - 1.24வில்வநாதீஸ்வரர் கோவில், திருவலம், வேலுார் மாவட்டம் - 0.23ஆராவமிதீஸ்வரர் கோவில், மேட்டுமருதுார், கரூர் - 1.84புஷ்பவனநாதசுவாமி கோவில், வேட்டமங்கலம், கரூர் மாவட்டம் - 5.22சோமேஸ்வர சுவாமி கோவில், சோமூர், கரூர் மாவட்டம் - 2.95திருநாகேஸ்வரமுடையார் கோவில், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம் - 0.38பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், துறையூர், திருச்சி மாவட்டம் - 0.76வீரவினோதீஸ்வரர் கோவில், வெள்ளாங்குளி, திருநெல்வேலி மாவட்டம் - 1.87பூமிநாதசுவாமி கோவில், வீரவநல்லுார், திருநெல்வேலி மாவட்டம் - 2.58குலசேகரமுடையார் கோவில், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம் - 1.18சோழிஸ்வரர் கோவில், வே.துறையூர், திருச்சி மாவட்டம் - 7.12வாலீஸ்வரர் கோவில், வி.துறையூர், திருச்சி மாவட்டம் - 5.60

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAAJ68
ஜூன் 02, 2025 11:24

இந்த ஒதுக்கீட்டில் இருந்து உங்களுக்கு 40 சதவீதம் கமிஷன் ஒதுக்கப்பட்டு இருக்குமே. அதையும் சேர்த்து சொல்வது தானே.

ஆரூர் ரங்
ஜூன் 02, 2025 10:46

என்னவோ சேகர் பாபு சொத்திலிருந்து 100 கோடியை வாரி வழங்கியது போல அறிக்கை. கடவுளுக்கே அடுக்காது. முழுக்க முழுக்க பக்தர்கள் அளித்த காணிக்கை பணம். கோயில் திருப்பணி நடத்த, அல்லது தலையிட சட்டப்படி அரசுக்கு உரிமையில்லை. அறங்காவலர்களது பொறுப்பு மட்டுமே.

Palani
ஜூன் 02, 2025 06:41

One of the temple towers in eastern side of Srirangam Ranganathar Swamy temple was damaged three years ago and it has not been restored till date. The residents of Srirangam and the pilgrims coming to Srirangam are the worst sufferers. The irony is the TN minister in charge of HR

Kasimani Baskaran
ஜூன் 02, 2025 03:33

கோவில்களை நிர்வகிக்கும் உரிமை மதசார்பற்ற அரசுக்கு கிடையாது.

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை