உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்

சென்னை: ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை மெரினாவில், 2017ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் பார்வையிழந்த நபருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, திருவல்லிக்கேணி ரோட்டரி நகரைச் சேர்ந்த விமலா என்பவர் தாக்கல் செய்த மனு: ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை மெரினா கடற்கரையில், 2017ம் ஆண்டு ஜன., 17 முதல் 23ம் தேதி வரை, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது. ஜன., 23 மாலை, நானும், மகன் கார்த்திக், வீட்டினுள் அமர்ந்திருந்தோம்.ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, ஏற்கனவே மகனுக்கு அறிவுறுத்தி இருந்தேன். அதன்படி அவரும் பங்கேற்கவில்லை. ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறையில் ஏற்பட்ட சத்தம் கேட்டு, வீட்டைப் பூட்டினோம். திடீரென உள்ளே நுழைந்த போலீசார், எங்களை வெளியே இழுத்து போட்டனர்.மகன் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். போலீசார் தாக்கியதில், மகனின் இடது கண் பார்வை பறிபோனது. எனவே, உரிய மருத்துவ சிகிச்சை கோரிய என் மனுவை பரிசீலிக்குமாறு, கடந்த 2022ம் ஆண்டில் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அந்த உத்தரவு புறக்கணிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு, இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீதான இறுதி விசாரணை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று வந்தது.இதற்கு ஆட்சேபம் தெரிவித்த, காவல் துறை தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத், ''போராட்டக்காரர்கள் வீசிய கற்களால் தான், மனுதாரரின் மகனுக்கு கண்பார்வை பறிபோனது,'' என்றார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இடது கண் பார்வை பறிபோன இளைஞருக்கு, தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramaswamy Jayaraman
மார் 20, 2025 11:37

ஜல்லி கட்டு தடை செய்யப்படவேண்டிய விளையாட்டு. வருட வருடம் சிலர் இறக்கிறார்கள் பலர் காயப்படுகிறார்கள். இதற்காக போராடிய சிலர் இந்த விளையாட்டால் பாதிக்கப்படாதவர்கள். பப்ளிசிட்டிக்காக போராடிவிட்டு அது கிடைத்தவுடன் அதை பயன்படுத்தி பணம் செய்கிறார்கள். இந்த விளையாட்டில் கலந்து கொண்டால் வரும் பலனை அவர்கள் தான் அனுபவிக்க வேண்டும். அரசு பணத்தை செலவு செய்யக்கூடாது.


ஆரூர் ரங்
மார் 20, 2025 11:20

இன்றுவரை எனக்குப் புரியாத விஷயம். ஜல்லிக்கட்டை தடை செய்தது யார்? யாரை எதிர்த்து யார் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தினர்? மத்திய திமுக கூட்டணி அரசு தடை செய்திருந்தால் திமுக வே எதற்குப் போராட்டம் நடத்தியது? ஆக பொது மக்களுக்கு சம்பந்தமில்லாத போராட்டம். போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 176000000000 திமுகவே இழப்பீடு கொடுக்கலாம். தேர்தலில் உதவும்.


Venkateswaran Rajaram
மார் 20, 2025 09:35

இது எல்லாம் ஒரு வீர விளையாட்டா ஒரு மாட்டை நூறு பேர் சேர்ந்து பிடிக்க முயற்சிப்பது ஒரு வீர விளையாட்டு அல்ல ஒத்தைக்கு ஒத்தையாக நின்று தனியாக விளையாட வேண்டும்... கூட்டமாக சேர்ந்து கொண்டு நடுவில் மாட்டை வைத்துக் கொண்டு ஒருவன் காலை பிடிப்பது ஒருவன் வாலைப்பிடிப்பது ஒருவன் கொம்பை பிடிப்பது கேவலமாக இருக்கிறது வீர விளையாட்டு என்று சொல்வதற்கு


अप्पावी
மார் 20, 2025 09:01

நஷ்ட ஈட்டை தாக்குதல் நடத்திய போலீஸ்காரங்க சம்பளத்திலிருந்து குடுங்க. ஏற்கனவே பலருக்கு தண்ட சம்பளம். மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுக்கக் கூடாது.


vbs manian
மார் 20, 2025 08:37

ஜல்லிக்கட்டில் உயிர் இழக்கும் "படுகாயமுற்று உடல் உறுப்புகளை இழக்கும் இளைஞர்களுக்கு ஏதேனும் கிடைக்கிறதா.


CK கந்தவேல்
மார் 20, 2025 08:27

பாதிப்பு ஏற்பட்டால் போராட்டம் நடத்தியவர்கள் தலைமை தாங்கியவர்கள்தான் ஈடு செய்யனும். அரசு தரோநும் என்பது என்ன நியாயம்


Appa V
மார் 20, 2025 08:21

யாரும் குறை சொல்ல முடியா ஆட்சியில் இப்படியும் நடக்குதா