உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வில்வித்தை பயிற்சியாளருக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை

வில்வித்தை பயிற்சியாளருக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை

சென்னை: வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் உசைனியின் மருத்துவ சிகிச்சைக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், ஷிஹான் ஹூசைனி, வில்வித்தை வீரர்களை உருவாக்கி வருகிறார். அவரது நேரடி பயிற்சியின் கீழ், 100 வில் வித்தை வீரர்கள், 300 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு, துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ