வாசகர்கள் கருத்துகள் ( 12 )
என்னது பட்டாக மாற்ற ரூ.7ஆயிரம் லஞ்சம் மட்டுமேவா ? வி.ஏ.ஓ., துரைபாண்டி மற்றும் அலுவலக உதவியாளர் பாக்கியலட்சுமி இன்னும் வளரனும், சென்னைல அசோக்நகர்ல சர்வேயர் சந்தோஷ் எவ்வளவு வாங்குவர் தெரியுமா? தலைவர் சந்தோஷ் , இவர் கூடவே ஆட்டோ டிரைவர் முத்துவை வைத்து வசூல் வேட்டை நடத்துவார். மற்ற அரசாங்க லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் எல்லோரும் ஒரு எட்டு அசோக்நகர் ஆபீஸ் போய் தலைவர் சந்தோஷ் மற்றும் ஆட்டோ டிரைவர் முத்து கிட்ட ட்ரைனிங் எடுங்கப்பா. சக பத்திரிகை நண்பர்க்களே சென்னை அசோக் நகர்ல இருக்கும் வி.ஏ.ஓ ஆபீஸ் , RTO ஆபிஸ் விஜயம் பண்ணுங்க அப்போ சூப்பர் நியூஸ் கிடைக்கும்
எதற்கும் முன்னெச்சரிக்கையாகத் தான் ‘கை நீட்டாமல், ‘ துணையாளர்களை மாட்டிவிட்ட VAO வுக்கு நல்ல தொலை நோக்குப் பார்வை
வேலை வாங்க பல லட்சங்களை அள்ளி விட்ட அதிகாரி லஞ்சம் வாங்கவில்லை என்றால்தான் அதிசயம்...
அது எப்படி திமிங்கலம் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரத்துல எவனும் சிக்க மாற்றான்?
ஏழாயிரம் ரூபாய் இதை பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை முப்பாதாயிரம் கோடி அடிததவனை விட்டு வைத்துள்ளது. கேவலமாக இருக்கிறது
சிக்கியவர்கள் quota வில் வேலைக்கு சேர்ந்தவர்களா அல்லது காணிக்கை செலுத்தி சேர்ந்தவர்களா.
இச்செய்தியில் உள்ளது போல் இனி ஒவ்வொரு முறையும் இதுமாதிரி லஞ்சம் எனும் பெயரில் பிச்சை எடுத்து சுரண்டி நாட்டை குட்டிச்சுவராக்கும் கரையான்களின் புகைப்படம் + பெயர் + அந்த கரையான் வகிக்கும் / வகித்த பதவி அனைத்தையும் பொதுவெளியில் வெளியிட்டு அந்த கரையானின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.
ஆயிரம் ஐநூறு என லஞ்சம் வாங்குகிறவர்கள் சிக்குகிறார்கள் ஆனால் கோடிகணக்கான ரூபாய் விஞ்ஞானரீதியாக வாங்குகிற அரசியல்வியாதிகளை லஞ்ச ஒழிப்புத்துறை வணங்குகிறது
ஏழு லட்சம், ஏழு கோடி லஞ்சம் வாங்குவர்களை என்றைக்கு பிடிப்பீங்க?
"பாக்கியம் செய்யாத பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா..."அரசு வேலைக்கு இழுக்கு செய்யும் ஆட்கள், இவங்கள இன்னும் என்ன செய்யப்போகிறார்கள். .
vao தப்பித்துவிடுவார் மாட்டிக்கொண்டது பாக்கியலட்சுமி. vao தனக்கும் பாக்கியலக்ஷ்மிக்கும் சம்பந்தம் இல்லை. அவர்தான் லஞ்சப்பணத்தை வாங்கினார் எனவே அவர்தான் குற்றவாளி என்று சொல்லி தப்பித்துவிடுவார் . உடனே அவரை அருகிலுள்ள ஊருக்கு மாற்றிவிடுவார்கள். பாக்கியலக்ஷ்மிக்கு ஆப்பு.
பாக்கியலட்சுமிக்கு ஆப்பா ?