உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 அதிகாரிகள் 6 கூட்டம் நடத்த டீ உள்ளிட்ட செலவுக்கு ரூ.9 லட்சம்

15 அதிகாரிகள் 6 கூட்டம் நடத்த டீ உள்ளிட்ட செலவுக்கு ரூ.9 லட்சம்

சென்னை : மாநில அணைகள் பாதுகாப்பு அதிகாரிகள் 15 பேரின், டீ, காபி, மதிய உணவு செலவிற்கு, 9 லட்சம் ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டம் 2021ல் அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழகத்தில், 2022ம் ஆண்டு ஜூலை மாதம், அணைகள் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி, அரசாணை வெளியிடப்பட்டது. ஒரு தலைமை பொறியாளர் தலைமையில், 15 பேர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், மத்திய, மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன், அணைகள் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும். இதற்காக, 2028 ஜூலை மாதம் வரை மூன்று ஆண்டுகளுக்கு ஆறு கூட்டங்கள் நடத்த, 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு கூட்டத்திற்கு 1.50 லட்சம் ரூபாய் வரை செல வழித்து கொள்ளலாம். இந்நிதியில், டீ, காபி, மதிய உணவு, சால்வை, பூங்கொத்து, நினைவுப் பரிசு, போட்டோ, வீடியோ செலவுகளை பார்த்து கொள்ள வேண்டும் என, நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை