உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை

தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில், 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் தங்கம் வென்றனர். அவர்களுக்கு, தலா 25 லட்சம் ரூபாய்; அணி தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு நேற்று, 15 லட்சம் ரூபாய் என, 90 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். அடுத்து வரும் குளோபல் செஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார். முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ரூ.90 லட்சம் வழங்கிய ஸ்டாலின்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ