உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தா பிடிங்க ராஜினாமா; உள்துறை செயலருக்கு அனுப்பினார் இன்ஸ்பெக்டர்; போலீஸ் துறையில் அதிர்ச்சி

இந்தா பிடிங்க ராஜினாமா; உள்துறை செயலருக்கு அனுப்பினார் இன்ஸ்பெக்டர்; போலீஸ் துறையில் அதிர்ச்சி

சென்னை: தன் பணியில் தலையீடு இருப்பதால், வேலையை ராஜினாமா செய்வதாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம், ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சரவணன். 16 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வரும் அவர் தமது அதிகாரத்தில் முகாம் அலுவலக எழுத்தர் (ரைட்டர்) தலையிடுவதாக கூறி உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். தொடரும் இதுபோன்ற நடவடிக்கைகள் எதிரொலியாக பணியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் கூறி இருக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eo1i4ef9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் அனுப்பிய கடிதத்தில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது; திருவாடானை உட்கோட்ட முகாம் அலுவலக எழுத்தர் தொடர்ந்து என்னிடம் கேட்காமல் ஆர்.எஸ். மங்கலம் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக தொடர்ந்து அலுவல்களை நியமித்து தமது அதிகாரத்தில் தலையிட்டு வருகிறார். இதுதொடர்பாக ஏற்கனவே அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறேன். தற்போது காவல்நிலைய சரகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எனது வாகன டிரைவரை வேறு பணிக்கு வருமாறு ஆயுதப்படையில் இருந்து தன்னிச்சையாக எனது கவனத்துக்கு தெரிவிக்காமல் நேரடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் எனது காவல் பணியை திறம்பட செயல்பட முடியவில்லை. தற்போது உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனத்துக்கு ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர், 14 காவலர்களை என்னிடம் எவ்வித அறிவிப்பும் இன்றி தன்னிச்சையாக பணி நியமித்துள்ளனர். தனது காவல் நிலையத்தில் ஒப்பளிக்கப்பட்ட அதிகாரிகள், காவலர்களில் 10 பேர் தமது அனுமதி இல்லாமல் அயல்பணியாக பணிபுரிந்து வருகின்றனர். காவல் நிலையத்தில் மொத்தம் 328 புலன் விசாரணை வழக்குகள், 162 குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் 247 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புலன்விசாரணை நிலையில் உள்ள 328 வழக்கு விவரங்களை குற்றப்பதிவு பணியக தரவுகளை சேமிக்கும் பணிக்கு சிறப்பு சார்பு இன்ஸ்பெக்டர் ஒருவர் மட்டுமே உள்ளார். அவரும் உடல்நிலை பாதிப்பால் அவதிப்படுவதால் சரியாக பணி செய்ய முடிவது இல்லை. இதனால் வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியாமல் வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது. எனவே , எனது காவல்நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், காவலர்களுக்கு பொறுப்பு அதிகாரியான என்னை கேட்காமல் திருவாடானை உட்கோட்ட முகாம் அலுவலகத்தில் இருந்து மாவட்ட தனிப்பிரிவு அலுவலக உத்தரவின் பேரில் தன்னிச்சையாக பணி நியமித்து நிர்வாகத்தில் தலையிட்டு சீர்குலைவை ஏற்படுத்துவதால் காவல் ஆய்வாளராக பணியாற்ற விருப்பம் இல்லை. சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் இல்லை. இவ்வாறு இன்ஸ்பெக்டர் சரவணன் உள்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறி உள்ளார்.அவரது இந்த கடிதம், போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும், போலீசார் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Kanns
ஜன 13, 2025 11:16

Why said Inspector Silent on Vested Political/Groups/Gangs Extensive Interferences in Investigations-Arrests-Defamations-Prosecutions-Convictions etc in False Cases, Mamool Extortions etc etc


D.Ambujavalli
ஜன 13, 2025 05:55

அந்த ரைட்டருக்கு அரசியல்வாதிகளின் பின்புலம் இருக்கும் அந்த அகம்பாவத்தில், தன்னை இன்ஸ்பெக்டர் என்ன, DSP ஆகக்கூட எண்ணி ஆட்டம் போடலாம் அவரின் underground செய்லல்களுக்கு இன்ஸ்பெக்டர் இடையூறு செய்திருக்கலாம் பொறுமை எல்லை மீறிய நிலையில்தான் ராஜினாமா செய்திருக்கிறார் பாவம் இன்னும் இத்தகைய போலீஸ் ஆபீசர், போலீஸ் ஊழியர்கள் குடும்பப் பொறுப்புக்காக அடங்கி நடக்கும் நிர்பந்தத்தில் இருக்கிறார்களோ?


MUTHUKUMAAR
ஜன 13, 2025 05:26

சபாஷ்


Mediagoons
ஜன 13, 2025 01:56

மீடியாக்களுடன் இணைந்து ஒரு அரசியல் ஸ்டன்டு


Kasimani Baskaran
ஜன 13, 2025 00:47

கிழவியை பிடிக்க அல்லது சிறார்களை பிடிக்க என்று சிறப்புப்படையே உருவானால் கொஞ்சம் நஞ்சம் மனச்சாட்சியுள்ள காவலர்கள் எப்படி வேலை செய்யமுடியும்?


KRISHNAN R
ஜன 12, 2025 21:18

ரொம்ப கஷ்டமாக இருக்கிறது


spr
ஜன 12, 2025 20:53

இதனால் ராஜினாமா செய்வதால் ஒரு பலனும் ஏற்படாது.அதைவிட பதவியிலிருந்து கொண்டே குறிப்பிட்ட நபருக்குத் தொல்லை கொடுப்பதன் மூலம் அவரை ஓரளவு அடக்கி வைக்கமுடியும்.ஒரு காலத்தில் வெல்லவும் முடியும்.


HoneyBee
ஜன 12, 2025 20:17

இதுதான் விடியல் சர்வாதிகார ஆட்சி. காவல் துறை வெட்கி தலை குனிகிறது


Ramesh Sargam
ஜன 12, 2025 19:56

ராஜினாமா செய்யாமல், சட்டத்தின் மூலமாக போராடவேண்டும். இப்பொழுது என்ன ஆகுமென்றால், அந்த ரைட்டர் தன் இஷ்டத்துக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வார். அவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக, திமுக பு ற ம் போக்குகளுக்கு ஆதரவாக இருக்கும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 12, 2025 19:08

16 வருட சர்வீஸ் இருந்தும், இவருடைய டிரைவர், இவரை விட குறைந்த ரேங்க்கில் உள்ள காவலர்களைக் கூட கட்டுப்படுத்த இயலாத இவர் ஒரு கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ, ஏன் சாதாரண கோவில் திருவிழா கூட்டத்தைக் கூட கட்டுப்படுத்த முடியாது. இவர் இன்ஸ்பெக்டராக இருக்க சற்றும் தகுதியற்றவர். ராஜினாமா செய்ததே நல்லது. கிளம்பு கிளம்பு.


Ganesun Iyer
ஜன 13, 2025 13:28

வீட்ல, உன் பொண்டாட்டி என்ன மதிக்கிறதில்லன்னு அம்மா சொன்னா, மருமகளை அடக்க தெரியலே வெளியே போன்னு சொல்றது நல்ல த்ரிவேடிய ஸ்டாக்க்கு....


புதிய வீடியோ