உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரூ.2,000 லஞ்சம் வாங்கும் சர்வேயர் வீடியோவால் ஷாக்

 ரூ.2,000 லஞ்சம் வாங்கும் சர்வேயர் வீடியோவால் ஷாக்

புதுக்கோட்டை: புத்தாம்பூர் அருகே, விவசாயி உருமையா, 47, என்பவரிடம், சர்வேயர் எழில்கொடி, 35, லஞ்சம் வாங்கும் வீடியோ பரவி வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம், ராயவயல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி உருமையா. இவர், தன் மனைவி பவித்ரா பெயரில் உள்ள இடத்தை, பட்டாவில் உட்பிரிவு செய்ய, புத்தாம்பூர் சர்வேயர் எழில்கொடியை அணுகியுள்ளார்.அதன்படி, ஒரு மாதம் முன், சம்பந்தப்பட்ட இடத்தை தன் உதவியாளருடன் பார்வையிட்ட எழில்கொடி, 2,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வீடியோ தற்போது பரவி வருகிறது.வீடியோவில், உருமையா, 'நான் ஏற்கனவே முன் பணமாக, 2,000 ரூபாய் கொடுத்துள்ளேன். விரைவாக வேலையை முடித்து கொடுங்கள். இப்போது எவ்வளவு வேண்டும்' என, கேட்கிறார். அதற்கு, எழில்கொடி, 'நீங்களே பார்த்து கொடுங்கள்' என்கிறார்.அதன் பின், அவர், 1,000 ரூபாய் கொடுக்கிறார். 'மேலும், 1,000 ரூபாய் கொடுங்கள்' என, எழில்கொடி கேட்டு, 2,000 ரூபாய் வாங்கும் காட்சி, அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
ஆக 22, 2026 12:23

பயம் வாணாம். ஆதாரம் பாத்தலேன்னு விடுதலை செஞ்சிருவாங்க.


Kasimani Baskaran
ஆக 22, 2026 06:45

பெயர் அசிங்கமாக இருந்தால் டாஸ்மாக்கை இன்ப பானம் என்று சொல்வது போல லஞ்சத்துக்கும் பெயர் மாற்றம் செய்து விடலாம்.


ALAGAPPAN NACHIAPPAN NACHI
ஆக 22, 2026 04:49

This is Normal ...TN


vns
ஆக 21, 2026 21:52

எல்லோரும் முன்னேற நினைக்கிறார்கள், ராக்கெட் வேகத்தில்.. இட ஒதுக்கீடு மக்களுக்கு லஞ்சம் முன்னேறுவதற்கான வழி.


visu
ஆக 21, 2026 21:07

லஞ்சம் வாங்குபவர்களை வேலையை விட்டு தூக்கினாள் தான் பயம் வரும் சும்மா துறை ரீதியான விசாரணை என்று காலத்தை ஓட்டினால் எப்படி


தமிழ் நாட்டு அறிவாளி
ஆக 21, 2026 20:44

அரசு வேலையில் உள்ள பிச்சைகாரர்கள்.


ஜெகதீசன்
ஆக 21, 2026 20:31

அதிகார பிச்சை எடுக்கும் ஜென்மங்கள்.


Jagan
ஆக 21, 2026 20:29

இடஒதுக்கீடு கேஸ் - எல்லா மட்டத்திலும் இந்த இடஒதுக்கீடு கேஸுங்களால் இருப்பதால் நாடு நாசமாகிறது


Sesh
ஆக 21, 2026 20:08

லஞ்சம் வாங்காத சர்வேயர் பூமியில் கிடையாது .சவால் .


Rameshmoorthy
ஆக 21, 2026 20:08

Shameless officers, they all think salary is different and this is their right and thinking public should pay


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை