வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது போன்ற குற்றவாளிகள் தான் 2047 ல் பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பர் இந்த நாட்டில்.
சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 12.41 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கோவை துடியலுாரை சேர்ந்தவர் மார்ட்டின். சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து விற்று, 900 கோடி ரூபாயை சுருட்டி உள்ளார். இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், மார்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறையினர் மூன்று நாட்கள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக, அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை:லாட்டரி சீட்டு முறைகேடு தொடர்பாக, கேரளா போலீசார் பதிவு செய்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. மேகாலயா போலீசாரும், லாட்டரி முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதில், நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறை விசாரிக்கிறது. இவ்வழக்கு தொடர்பாக, மார்ட்டின் மற்றும் அவரது உறவினர் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நான்கு அச்சகங்களில் சோதனை நடத்தப்பட்டது.மார்ட்டினின், 90 சதவீத லாட்டரி வியாபாரம், போலி லாட்டரி சீட்டு அச்சிடுவதன் வழியே நடந்துள்ளது. அரசுக்கு வரி செலுத்துவதை தவிர்க்க, ஆறு ரூபாய் லாட்டரி சீட்டுக்கு, 10,000 ரூபாய்க்கு குறைவான பரிசுத்தொகை அறிவித்து வியாபாரம் செய்துள்ளார்.பரிசுத்தொகை நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கே கிடைக்க வழி செய்துள்ளார். கருப்பு பணத்தை வெள்ளையாக்க முற்பட்டுள்ளார்.லாட்டரி வியாபாரம் வழியே அவரது நிறுவனத்திற்கு அதிக லாபமும், மாநில அரசுகளுக்கு குறைந்த வருவாயும் கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். முறைகேடாக சம்பாதித்த பணத்தில், சென்னை, மும்பை, துபாய், லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், அசையாச் சொத்துக்கள் வாங்கி உள்ளார். பங்கு சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர்.மொத்தம், 22 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையின் போது, சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை கைப்பற்றப்பட்டன. மேலும், 12.41 கோடி ரூபாய் கரன்சி நோட்டுகளை பறிமுதல் செய்ததுடன், வங்கிகளில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை, 6.42 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கேரளாவில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில், 920 கோடி ரூபாய் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, 622 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற குற்றவாளிகள் தான் 2047 ல் பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பர் இந்த நாட்டில்.